செய்திகள் :

ஐஸ்கிரீம் கோன் அடியில் சாக்லேட் எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 16

post image

அனைவருக்கும் பிடித்தமான ஐஸ்கிரீம் கோன்களின் அடியில் இருக்கும் அந்தச் சிறிய சாக்லேட் துண்டு, வெறும் சுவைக்காக மட்டும் வைக்கப்படவில்லை. அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான பொறியியல் மற்றும் வணிகக் காரணம் உள்ளது.

ஐஸ்கிரீம் கோன்கள் பிஸ்கட் அல்லது Waffle கொண்டு தயாரிக்கப்படுபவை. ஐஸ்கிரீம் மெதுவாக உருகத் தொடங்கும்போது, அது கோனின் அடியில் உள்ள சிறிய துளை வழியாகக் கசிந்து நமது கைகளை அழுக்காக்கிவிடும்.

ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்
ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்

1950-களின் இறுதியில், ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் இதற்கொரு தீர்வைக் கண்டறிந்தனர். 1959-ல் Spica என்ற இத்தாலிய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர், ஐஸ்கிரீம் மற்றும் கோனுக்கு இடையில் ஒரு எண்ணெய் மற்றும் சாக்லேட் படலத்தைப் பயன்படுத்தி, கோன் நனைந்து போகாமல் (Soggy) தடுக்கும் முறையைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். இதுவே ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்களின் இன்றைய நவீன புரட்சிக்கு வித்திட்டது.

கோனின் அடிப்பகுதியில் உருக்கப்பட்ட சாக்லேட்டை ஊற்றினால், அது குளிர்ந்த நிலையில் உறைந்து ஒரு நீர்க்கசிவு இல்லாத அடைப்பானாக மாறும்.

இது உருகும் ஐஸ்கிரீம் வெளியேறாமல் தடுத்து, கடைசிவரை கோனை மொறுமொறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த முறையை முதலில் பிரபலப்படுத்தியது Cornetto நிறுவனம்தான்.

ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்
ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்

வேறு சில பயன்கள்:

  • உணவியல் ரீதியாக, ஒரு இனிப்பைச் சாப்பிட்டு முடிக்கும்போது கிடைக்கும் அந்த இறுதித் துண்டு (Final bite) நுகர்வோருக்கு மிகுந்த திருப்தியைத் தரும். இந்தச் சாக்லேட் துண்டு அந்த வேலையைச் சரியாகச் செய்கிறது.

  • மக்கள் இந்தச் சாக்லேட் நுனியை மிகவும் விரும்புவதால், தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் Muddy Bites என்ற பெயரில் ஐஸ்கிரீம் இல்லாமல் வெறும் கோன் நுனிகள் மட்டும் தனி சிற்றுண்டியாக விற்கப்படுகின்றன.

  • சாக்லேட் அடுக்கு கோனின் அடிப்பகுதிக்குக் கூடுதல் வலிமையைத் தருவதால், பேக்கிங் மற்றும் போக்குவரத்தின் போது எளிதில் உடையாமல் இருக்கின்றன.

ஏபிசி ஜூஸ்... டர்மரிக் ஷாட்ஸ்... ஜூஸ் ஃபாஸ்ட்டிங்... ஆபத்து ஏற்படுத்தும் டீடாக்ஸ் உணவுகள்!

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை கூகுள் டாக்டர்தான் பலருக்கும் அவசரகால ஆலோசகர். எந்தப் பிரச்னைக்கும் கூகுளில் தீர்வு தேடிக் கொண்டிருந்தவர்கள், இன்று இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைக் கண்மூடித்தனமாக நம்ப ஆர... மேலும் பார்க்க