LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்
LIK: "அப்போ 250 ரூபாய்தான் இருந்தது; அனிருத் 50,000 ரூபாயை என் பேக்ல வச்சிருக்கார்" - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது இப்படம்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று பிரமாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது.
விக்னேஷ் சிவன் பேசுகையில், "ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, கதை சொல்லணும்னு சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதுல தாமதமாகிட்டே இருந்தது.
அந்த சமயத்துல பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு பெரிய படத்தை டைரக்ட் செய்யுறதுக்கான வாய்ப்புக் கிடைச்சது. அதுபோல, நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா எனக்குக் கொடுத்த வார்த்தைக்காகவும், எனக்காகவும் காத்திருந்தார்.
என்னுடைய கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்." என்றவர், "'நானும் ரெளடி தான்' படத்தை பாண்டிச்சேரில எடுக்கணும்னு ஆசை இருந்தது.

அந்த நேரத்துல பாண்டிச்சேரில தங்கி கதையை ரெடி பண்றதுக்கு என்கிட்ட பெருசா காசு இல்ல. அந்த நேரத்துல அனிருத்கிட்ட சொல்லிட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பிட்டேன்.
அப்போ என்கிட்ட பஸ்ல போகுறதுக்கு 250 ரூபாய் பணம் மட்டும்தான் இருந்தது. நான் பஸ்ல போயிட்டு இருக்கும்போது அனிருத் எனக்கு மெசேஜ் பண்ணினார்.
அவர் 'பேக்ல 50,000 ரூபாய் பணம் வச்சிருக்கேன்'னு சொன்னார். அந்த நேரத்துல நான் கண்கலங்கிட்டேன்." எனப் பேசினார்.
















