செய்திகள் :

கிரெடிட் கார்டு கடனே அல்ல, 'கைமாத்து'; 'இந்த' லிமிட் நல்லது #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

post image

நாள் 3

'கற்றது கை மண் அளவு... கல்லாதது உலகளவாச்சே?' - கிரெடிட் கார்டுகளைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

அவற்றை விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.

"கிரெடிட் கார்டு என்பது கடனே இல்லை. இது ஒரு Revolving Credit (சுழற்கடன்).

அதாவது, கார்டை ஸ்வைப் செய்து இப்போது ஒரு தொகையை வாங்கியிருக்கிறீர்கள். அதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டினால் வட்டி கிடையாது.

வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்
வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்

அதைத் தாண்டினால்தான், அதிக வட்டி... நெருக்கடி போன்ற பிரச்னை. அது என்ன நெருக்கடி என்பதை நேற்றைய அத்தியாயத்தில் தெரிந்துக்கொண்டோம்.

சுழற்கடனை நம்ம வழக்கு மொழியில் சொல்ல வேண்டுமானால், 'கைமாத்து' என்று சொல்லலாம்.

கைமாத்தாக வாங்கும் கடன் மூலம் வங்கிகளுக்கு என்ன லாபம் என்று தானே யோசிக்கிறீர்கள்?

பொதுவாக வங்கிகள் வட்டி, கட்டணங்கள், கமிஷன்கள் மூலம் வருமானம் பார்க்கின்றன.

சில வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்குக் கட்டணங்கள் வசூலிக்கின்றன. அது மூலம் வங்கிகளுக்கு ஒரு வருமானம்.

இன்னொன்று, அனைவருமே டியூ தேதியில் கடனைக் கட்டிவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதனால், அப்படியும் வங்கிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

credit card - கிரெடிட் கார்டு
credit card - கிரெடிட் கார்டு

யார் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்?

நல்ல மற்றும் நிலையான வருமானம் உள்ளவர்கள்... நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், நீங்கள் எவ்வளவு லிமிட்டிற்கு கிரெடிட் கார்டு வாங்குகிறீர்கள்... பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்கள் மாத வருமானத்தில் மொத்த கடன் மற்றும் கிரெடிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளுக்குச் செல்லும் தொகை 20 - 25 சதவிகிதத்தைத் தாண்டிவிடவே கூடாது.

அதற்கேற்ற மாதிரி லிமிட்டுடன் கிரெடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

அதற்கென... பெரிய லிமிட்டிற்கு கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு குறைந்த அளவிற்குப் பயன்படுத்தி கொள்ளலாமே என்று நினைக்காதீர்கள்.

பெரிய லிமிட் வாங்கிவிட்டால், அதற்கேற்ற மாதிரி செலவு செய்ய மனது தூண்டும். மனம் ஒரு குரங்கு என்பதை மறந்துவிடாதீர்கள் மக்களே.

15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்

ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந்த வாரம் திங்கட்கி... மேலும் பார்க்க

ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? - RBI சொல்வது என்ன?

டிஜிட்டல் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் சிலர் லட்சக் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்... சிலரோ சில நூறுகளை மட்டும் வைத்திருக்கிறார்கள். இதெல... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்!

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கி மற்றும் ஏ.டி.எம்களில் சில வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளன.அவை...> இனி HDFC வங்கி ஏ.டி.எம்களில் யு.பி.ஐ மூலம் இலவசமாக பணம் எடுப்பதற்கு லிமிட் நிர்ண... மேலும் பார்க்க

நகை அடமானம்... ஒற்றை வளையலை வாங்க மறுக்கும் வங்கிகள்; காரணம் என்ன?

அவசரத் தேவைகளுக்கென 'எமெர்ஜென்சி ஃபண்டு' சேர்த்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஓர் அவசர பணத் தேவைக்கு சாமானியர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தங்க நகைக் கடன்தான். பணத் தேவையின்... மேலும் பார்க்க