LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்
NRI Corner 3 - வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சிறப்பு ஏற்பாடு; உங்கள் பெயரை உடனே பதிந்து கொள்ளுங்கள்
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னை, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும். பிற்காலத்துக்குப் பேருதவியாகஇருக்கும் என்கிற கேள்விக்குப் பதில் தெரியாமல் இருப்பது.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்தியாவில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று தெரியாமல் இருக்கும்போது, தவறான திட்டங்களை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, சொற்ப லாபமே கிடைக்கும்படி செய்துவிடுகிறார்கள் சிலர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வேலை, வேலை என எப்போதும் பிஸியாகவே இருப்பதால், சரியான திட்டங்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

மிக நல்ல லாபம் கிடைக்கும் என்று சொல்லி யூலிப் பாலிசிகளைப் பலருக்கும் தந்துவிடுகிறார்கள். இது இன்ஷுரன்ஸும், முதலீடும் கலந்த ஒரு திட்டமாகும். இதனால் போதிய அளவு இன்ஷுரன்ஸ் கவரேஜும் கிடைக்காது. முதலீட்டுப் பலனையும் அடைய முடியாது.
இன்னும் சிலர், பாதுகாப்பான முதலீடு, சூப்பரான வட்டி வருமானம் என்று சொல்லி கடன் பத்திரங்களைத் (Bonds) தந்துவிடுகிறார்கள். மாத வருமானம் வேண்டும் என்கிறவர்கள் மட்டுமே கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு நம் செல்வத்தைப் பெருக்க உதவாது என்பது நிச்சயம்.
இன்னும் சிலர், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்று நினைத்து, பங்குச் சந்தையில் தங்களுக்குப் பிடித்த பங்குகளை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அதன் மூலம் லாபம் கிடைக்கிறதா, எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இந்த நிலையில், சரியான வழிகாட்டலுடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் 12 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபத்தைப் பெற முடியும் என்பது கடந்தகாலம் காட்டும் உண்மையாக இருக்கிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் முதலீடு செய்ய நினைத்தால், அவர்களுடைய இன்றைய நிதி நிலையை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு, அவர்களின் ரிஸ்க் நிலை என்ன, எந்தெந்த ஃபண்ட் திட்டங்கள் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதைச் சொல்லி அவர்களுக்கு சரியான வழிகாட்டலை செய்யத் தயாராக இருக்கிறது 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் எதிர்கால இலக்குகளுக்கான பணத்தைக் குறை இல்லாமல் நீங்கள் சேர்க்க விரும்பினால், நீங்கள் ஜூம் இணையதளம்மூலம் எங்களுடன் நேரடியாகப் பேசலாம். வருகிற சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த ஜூம் கால் சந்திப்பு நடக்கும்.
இந்த வசதியைப் பெற விரும்புகிறவர்கள் பின்வரும் காலண்டி லிங்க்கை கிளிக் செய்து தங்கள் பெயரை உடனடியாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு ஏற்பாடு என்பதால், அவர்கள் மட்டுமே இந்த காலண்டி லிங்க்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.



















