செய்திகள் :

தேர்தல் களம்:``தோல்வி பயத்தால் அவதூறு பரப்புவது முறையல்ல..." - தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

post image

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ``UPA ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், எங்களது NDA கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அடிப்படைத் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, பா.ஜ.க தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பு புரியும். சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில் சேவையில் தமிழகத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை சௌந்தராராஜன்
தமிழிசை சௌந்தராராஜன்

ஜல் ஜீவன் மிஷன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பதற்றமடைவதைப் பார்த்தால், தி.மு.க தோல்வி பயத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மதுரைக்கு வந்தபோது, 'பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள். மெட்ரோ திட்டம் கொண்டுவர முயற்சிப்போம்" என்றார். ஒரு மாநில முதலமைச்சர் வரவேற்காமல், `பிளாக்மெயில் செய்கிறார்கள்' என முதல்வர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியால் அவதூறு பரப்புவது முறையல்ல. மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் போன்ற திட்டங்கள் தமிழர்களின் பயண நேரத்தைக் குறைத்துள்ளன.

பிரதமர், உள்துறை அமைச்சர், ஏன் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தாலே முதல்வர் பதற்றமடைகிறார்.

சொல்லப்போனால், தி.மு.க-வின் மூத்த அமைச்சர் துரைமுருகனே வந்தே பாரத் ரயிலின் வேகத்தைப் பாராட்டி, அதில் பயணிப்பதையே விரும்புவதாக கேள்விப்பட்டேன். இதுதான் மத்திய அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி.

தி.மு.க எப்போதும் வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே முயல்கிறது. மத ரீதியான கருத்துக்களை யாராவது சொன்னால் கொதித்தெழும் இவர்கள், தங்களின் பிரிவினைப் பேச்சுகளை மட்டும் நியாயப்படுத்துகிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்பதாக சொல்லும் இந்த அரசுதான், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இன்று தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

இதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத்துள்ளார். மக்களின் பணம் எங்கே சுருட்டப்பட்டது, வாக்குறுதிகள் எப்படி மீறப்பட்டன என்பதை இன்று மாலை விசாலாட்சி தோட்டம் வரை நடைபெற உள்ள எனது சுறாவளிப் பிரச்சாரத்தில் ஆதாரங்களுடன் விளக்குவேன். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றியபோது, எண்ணிக்கையை அதிகரிக்க விடாமல் தி.மு.க ஏன் முட்டுக்கட்டை போடுகிறது?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

போர் நிறுத்தத்தை சாதித்த பாகிஸ்தான்: அமெரிக்கா, ஈரானை சமாளித்தது ஏன், எதற்கு?|Explained

உலகில் இன்று பரபர செய்தியே 'இரண்டு வாரங்களுக்கான ஈரான் போர் நிறுத்தம்'. அதுவும் 38 நாள்களுக்குப் பிறகு. இந்தப் போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை வரவேற்ற ஈரான் வெளியுறவுத் துறை அமை... மேலும் பார்க்க

இந்திரா Vs காமராஜர்: தமிழகத்தை உலுக்கிய 1971-ன் அந்தச் 'சதுரங்க' தேர்தல் | Vote Vibes

1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தேசிய அரசியலில் கோலோச்சிய காமராஜர் மற்றும் ராஜாஜி ஆகிய இரு துருவங்களின் செல்வாக்கு சரிந்து, கருணாநிதி ... மேலும் பார்க்க

'காத்திருந்து எலெக்சனுக்கு 30 நாளுக்கு முன்னாடி அவதூறு பரப்புறாங்க - நெல்லையில் விஜய் ஆவேசம்!

தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்த... மேலும் பார்க்க

கிருஷ்ணசாமி-ன் வெற்றிக்குக் கைகொடுக்குமா ஒட்டப்பிடாரம்? - களநிலவரம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரம். தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க., த.வெ.க என ஏற்கெனவே நான்குமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில், தனித்துப் போட்டியிடுகிறார், புதிய தமிழகம் க... மேலும் பார்க்க

"அமெரிக்காவைப்போல இப்போது மத்திய கிழக்கிற்கு பொற்காலம்" - ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி'

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போர் நிறுத்தத்தில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் போலும். இந்தப் போர் நிறுத்தத்தால் என்னென்ன நன்மைகள் என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர். "உலக அமைதிக்கு ஒரு... மேலும் பார்க்க

"ஈரான் மீதான போர் நிறுத்தம் 'ஓகே'; ஆனால், லெபனான் மீது தாக்குதல் தொடரும்" - நெதன்யாகு

இரண்டு வார போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டார். 'எங்களைத் தாக்கவில்லை என்றால் நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம்' என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அ... மேலும் பார்க்க