செய்திகள் :

''என்னுடைய நிலைப்பாட்டைத் தள்ளி வைக்கிறேன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி போட்டி!': திருமா!

post image

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

திருமா
திருமா

அதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்திருந்தது.

கடந்த சில நாட்களாக, இப்படியான முடிவை எடுத்ததற்காக திருமாவளவனுக்கு கூட்டணி தலைமையிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பேசப்பட்டன.

அப்படியான பேச்சுகள் மேலோங்கி இருக்கும் நேரத்தில் சட்டமன்ற தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்குவதாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் திருமா.

அதில் அவர், "2026-க்குப் பிறகு அரசியல் சூழல் மாறும். அதனால் நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஆனால், திருமாவளவன் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என வதந்திகளை கிளப்பிவிட்டனர். கூட்டணியே பாதிக்கப்படும் அளவிற்கு கருத்து பரப்பப்படும் சூழலில் அதனை கவனிக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு யுத்தகளத்தில் முன்நோக்கி போவது போல பின்நோக்கி வருவதும் முக்கியமானது.

மக்களவையில் SIR குறித்து திருமா பேச்சு
மக்களவையில் திருமா

பதவிக்காக நான் போட்டியிடவில்லை. தொங்கு சட்டமன்றம் வரும், அதனால் நான் போட்டியிடுகிறேன் என பேசுகிறார்கள். என்னுடைய நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். உத்தியை மாற்றி வைக்கிறேன்.

எனவே, நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது - என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும். இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது. அதாவது ஒவ்வொரு ... மேலும் பார்க்க

`அப்போ திரைச்சீலை... இப்போ பேனர்' - நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. தேசிய, மாநில கட்சிக... மேலும் பார்க்க

சூரியசக்தி மின் உற்பத்தியில் புதிய மைல்கல் - கோடையைச் சமாளிக்க தமிழ்நாடு ரெடி!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக சூரியசக்தி மின் உற்பத்தியும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க இது பெரும் உதவியாக அமைந்துள்ளதுடன்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வழக்கு: 3 மணிநேரம் விசாரணை செய்த நீதிபதி- குற்றவாளிகள் சொன்னது என்ன? | முழு விவரம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து த... மேலும் பார்க்க

Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

தவெக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சட்டப்படி, ... மேலும் பார்க்க

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை' - அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களு... மேலும் பார்க்க