செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? - வெளியான காங்கிரஸ் ...
Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது - என்ன அது?
ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும்.
இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது.
அதாவது ஒவ்வொரு காலாண்டிற்கும் சம்பளதாரர்கள் பெற்ற சம்பளத்தை ஃபார்ம் 24Q-ல் நிறுவனங்கள் அப்டேட் செய்யும். அதை பொறுத்தே ஃபார்ம் 16 கொடுக்கப்படும்.
புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஃபார்ம் 16 ஃபார்ம் 130 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதே போல, இப்போது இந்த ஃபார்ம் 24Q - ஃபார்ம் 138 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அடுத்ததாக, நிறுவனத்தில் பணிபுரியும் சம்பளம் வாங்காதவர்களுடைய தகவல்கள் 26Q-ல் அப்டேட் செய்யப்படும். இப்போது ஃபார்ம் 26Q ஃபார்ம் 140 ஆக மாற்றப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃபார்ம்களில் மேனுவலாக எந்தத் தகவல்களையும் நிரப்பத் தேவையில்லை. அவற்றில் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும்.
முக்கியமாக, வரி, கூடுதல் கட்டணம், செஸ் ஆகியவை ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதனால், நேர விரயம் தடுக்கப்படும்... தவறுகளும் குறைக்கப்படும்.
இதில் உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா?
நிறுவனங்களின் இந்த நடைமுறைகள் எளிதாகும் போது, நமக்குமே வருமான வரிக் கணக்குத் தாக்கலில் வேலை குறையும்... நடைமுறையும் எளிதாகும்.



















