செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? - வெளியான காங்கிரஸ் ...
`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆனால் தற்போது எந்த பொது நிகழ்ச்சிக்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்கின்றனர். இது குறித்து அபிஷேக் பச்சன் அளித்திருந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், யார் அதிக வெற்றி பெற்றவர் என்பது குறித்தும், திருமண வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் பாத்திரங்களையும் பற்றியும் பேசினார்.
அவர் இது குறித்து கூறுகையில், "என் பெற்றோரின் திருமணம் நடந்தபோது, என் தந்தையை விட என் தாயே மிகப் பெரிய நட்சத்திரமாகத் திகழ்ந்தார். எனவே, இது ஒன்றும் இயல்புக்கு மாறான விஷயம் அல்ல.

அது எப்போதும் ஒரு பார்ட்னர்ஷிப்பாக இருந்து வருகிறது. எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எனக்கு ஐஸ்வர்யாவைத் தெரியும். மேலும், நான் நடித்த இரண்டாவது திரைப்படமே அவருடன்தான். நான் இணைந்து நடித்த பல படங்களில் இடம்பெற்ற ஒரே நடிகை ஐஸ்வர்யா மட்டுமே.
சொல்லப் போனால், எனது இரண்டாவது படமான 'தாய் அக்ஷர் பிரேம் கே' (2000) படமே அவருடன் இணைந்து நடித்ததுதான். அப்போது நாங்கள் காதலில் இருக்கவில்லை. நாங்கள் வெறும் நண்பர்களாகவே இருந்தோம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே திகழ்ந்தோம்.
நாங்கள் காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும், பார்ட்னர்ஷிப்பாகவே இருந்தோம். `நான் சாப்பாடு கொண்டு வருகிறேன், நீ வீட்டைப் பார்த்துக்கொள்' என்பது போன்ற எந்த விவாதமும் இருந்ததில்லை.
அது மிகவும் இயல்பாக அமைகிறது.
என்னைப் பொறுத்தவரை, இது எனது கடுமையான அகங்காரத்திலிருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு பந்தயத்தில் வெற்றி பெற, வேறு யாரும் பின்வாங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது தந்தை அமிதாப் பச்சன் என்னை அறிமுகப்படுத்தவோ அல்லது எனக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கவோ இல்லை. ஆனால் பின்னர் எனது படங்களில் ஒன்றான 'பா' (2009) திரைப்படத்தைத் தயாரித்தார்" என்றார்.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயுடனான தனது உறவைப் பற்றி மனம் திறந்து பேசியது மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் தங்கள் மகள் ஆராத்யா பச்சனை எப்படி வளர்த்து வருகிறார்கள் என்பது பற்றியும் பேசினார். "பெற்றோர்களாக, தந்தைகள் மோசமான ஆசிரியர்கள்," என்று அவர் கூறினார், "தந்தைகள் மோசமான ஆசிரியர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார். ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.





















