தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி' -...
கைவிட்டுப் போன சோளிங்கர் தொகுதி; கடுப்பான அமமுக என்.ஜி.பார்த்திபன் திமுக-வில் ஐக்கியம்!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை அறிவித்திருந்தார் டி.டி.வி.தினகரன்.
அதாவது, சோளிங்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன்தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவார். தி.மு.க-வுக்கான சாவு மணியை இங்கிருந்து அடிப்போம்’ என்றார்.

இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு பதினோரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், சோளிங்கர் இடம்பெறவில்லை. மாறாக, பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்திக்குள்ளானார். இதையடுத்து, கடந்த வாரம் தனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்த பார்த்திபன், அ.ம.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்தகட்ட அரசியல் பயணம் பற்றியும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தார். முடிவாக, `தி.மு.க-வில் அவர் இணையலாம்’ என்று பேச்சு அடிபட்டது. அதன்படியே, இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் என்.ஜி.பார்த்திபன். அவருடன் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகளும் தி.மு.க-வில் ஐக்கியமானார்கள்.















