செய்திகள் :

நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - என்ன காரணம்?

post image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் மகேஷ். மேலும், கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (4-ம் தேதி) காலை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மகேஷ் செய்து வருகிறார்.

இதற்கிடையே மகேஷ் நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம், "தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் ஆதாயம் பெறும் பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. மேயர்களுக்கு மாதம் 30,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை கருத்தில்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்ய அவர்கள் தலைமை கூறியிருக்கலாம். ஆனால், மதிப்பூதியம் பெறுபவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் எம்.எல்.ஏ-க்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதில்லையே" என்றனர்.

மேயர் மகேஷ்

அதே சமயம், மேயர் பதவியில் இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் முழு கவனத்துடன் பணியாற்றாத நிலை ஏற்படலாம் என தி.மு.க தலைமை கருதியிருக்கலாம். ஒருவேளை எம்.எல்.ஏ ஆகாமல் இருந்தாலும் மேயர் பதவி இன்னும் சுமார் ஓராண்டு இருக்கிறதே என மெத்தனமாக இருந்துவிடுவார்களோ என்று கருதி கூட தி.மு.க தலைமை அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கருத்து எழுந்துள்ளது.

தலைமை கூறியதாலேயே மகேஷ் தனது மேயர் பதவியையும், வார்டு கவுன்சிலர் பதவியையும் ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது. அப்படியானால் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தஞ்சாவூர், திருப்பூர், ஓசூர் மேயர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யவில்லையே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆஸ்டின் மற்றும் மகேஷ்

இதுகுறித்து மகேஷ் தரப்பில் கூறுகையில், "சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேயர்களை ராஜினாமா செய்யும்படி தலைமையில் இருந்து கூறியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே மேயர் பதவியை மகேஷ் ராஜினாமா செய்துள்ளார். தலைமை கூறிய உடனே மகேஷ் அதை செயல்படுத்தி உள்ளார். பிற மேயர்களும்ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளது" என்றனர்.

யானையில் வந்த பண்ருட்டி ராமச்சந்திரன்! - திரும்பி பார்க்க வைத்த பாமகவின் முதல் வெற்றி!| முதல் களம்

முதல் களம் 13பாமகவின் முதல் தேர்தல் வெற்றி!1991-ல் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தேர்தல் அரங்கில் காலடி எடுத்து வைத்தது. முதல் தேர்தலில், அக்கட்சியின் வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற வெற்றி, பா... மேலும் பார்க்க

காங்கிரஸின் 'இந்திரா கேரண்டி' ; சி.பி.எம் சொல்லும் வாட்டர் மெட்ரோ - கேரளத்தில் அதிரடி வாக்குறுதிகள்!

கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பா.ஜ.க ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.... மேலும் பார்க்க

'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'

'மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்' என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர் விஜய்.விஜய்... மேலும் பார்க்க

'செங்கேணி அம்மன் கோவிலில் வழிபாடு.!' - தொகுதிக்குள் சென்டிமென்டாக பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி!

திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று பிரசாரத்துக்கு வந்த உதயநிதி 2021 கனெக்ட்டோடு செண்டிமெண்டாக தனது பிரசாரத்தை தொகுதிக்குள் ஆரம்பித்த... மேலும் பார்க்க