செய்திகள் :

IPL: "டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆடிய விதம் இருக்கே.!" - கேப்டன் இஷான் கிஷன் நெகிழ்ச்சி

post image

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி தனது புள்ளிப்பட்டியலில் கணக்கைத் தொடங்கியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் இஷான் கிஷன் ``தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தை விட, ஒரு அணியாக நாங்கள் காட்டிய ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். போட்டிக்கு முன்பாக வீரர்களிடம் நான் எதை எதிர்பார்த்தேனோ, அந்த உழைப்பையும் ஆற்றலையும் அவர்கள் மைதானத்தில் வெளிப்படுத்தினார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை.

ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆடிய விதம் ஆட்டத்தை எங்களுக்குச் சாதகமாக மாற்றியது. பவர்பிளேயிலேயே அவர்கள் சுமார் 80 ரன்கள் சேர்த்ததால், மற்ற பேட்டர்களுக்கு ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு விளையாட போதிய நேரம் கிடைத்தது. ஹர்ஷ் துபே வீசிய அந்தப் பந்தில் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஹர்ஷ் தனது உள்நாட்டுப் போட்டிகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஷிவாங் குமார் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். ஈடன் கார்டன் போன்ற சிறிய மைதானத்தில், ரின்கு சிங் போன்ற அதிரடி வீரர்களுக்கு எதிராக மிகுந்த மன உறுதியுடன் பந்துவீசினார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

இருப்பினும், பீல்டிங் துறையில் நாங்கள் ஒரு அணியாக இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 20 ரன்கள் வரை பீல்டிங்கில் விட்டுக்கொடுப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. டி20 கிரிக்கெட்டில் 10 அல்லது 20 ரன்கள் என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, அந்தத் தவறுகளைச் சரிசெய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் வலிமையாகத் திரும்புவோம்," என்று பேசியிருக்கிறார்.

SRH v KKR: ``இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை.!" - தோல்வி குறித்து கேப்டன் ரஹானே

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்நேற்று(ஏப்ரல் 2)மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்... மேலும் பார்க்க

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" - தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி. இப... மேலும் பார்க்க

LSG vs DC: "ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்தான் எங்களுக்குத் தேவைப்பட்டது" - அக்சர் படேல் பெருமிதம்

ஐபிஎல் 2026 தொடரின்நேற்றைய(ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ... மேலும் பார்க்க

GT vs PBKS: "அந்தத் தருணம் தான் எங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.!" - கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரின்நேற்றைய(மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அ... மேலும் பார்க்க

RR vs CSK: "இனிவரும் போட்டிகளில் எங்க ஆட்டம் சிறப்பாக இருக்கும்!" - ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 30) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை... மேலும் பார்க்க

RR vs CSK: "இந்த வருடம் கோப்பையை வெல்வதுதான் எங்களுடைய ஒரே இலக்கு" - கேப்டன் ரியான் பராக்

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த ஸ்கோரை 12.1 ஓவர்களில் எட்டி ப... மேலும் பார்க்க