செய்திகள் :

SRH v KKR: ``இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை.!" - தோல்வி குறித்து கேப்டன் ரஹானே

post image

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் தனது ஹோம் கிரவுண்டில் வெற்றியை நழுவவிட்டது.

இந்த தோல்விக்குப்பிறகு பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, ``நிச்சயமாக இது ஒரு கடினமான நாள்தான். பேட்டிங்கின்போது சில முக்கியமான பார்ட்னர்ஷிப்கள் அமைந்திருக்க வேண்டும். களத்தில் செட் ஆன பேட்டர்கள் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் அது இன்று நடக்கவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை, முதல் 10 ஓவர்களில் எதிரணி 130 முதல் 140 ரன்கள் வரை எடுப்பார்கள் என்றுதான் கணித்திருந்தோம். ஆனால், மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் ஆட்டத்திற்குள் எங்களைக் கொண்டு வந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்து சற்று மெதுவாக வந்தது. பிட்ச் பேட்டிங்கிற்கு இன்னும் சாதகமாகும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. இருந்தாலும், இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை. பவர்பிளேயில் 78 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைப் பெற்றும், முக்கியமான ஒரு விக்கெட்டை கிரீன் ரன் அவுட் மூலம் இழந்தது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்தது.

கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே

ஹோம் கிரவுண்டில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இப்போது நாங்கள் மீண்டும் அறைக்குச் சென்று, அணியில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கப் போகிறோம். பேட்டிங்கில் இன்னும் ஒரு வீரரை கூடுதலாகச் சேர்ப்பது பற்றியும் ஆலோசிப்போம். இன்னும் 3-4 நாட்கள் இடைவெளி இருப்பதால், ஒரு மோசமான நாளை மறந்துவிட்டு நேர்மறையான மனநிலையுடன் அடுத்தப் போட்டியில் மீண்டு வருவோம்" என்று பேசினார்.

IPL: "டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆடிய விதம் இருக்கே.!" - கேப்டன் இஷான் கிஷன் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்நேற்று(ஏப்ரல் 2)மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்... மேலும் பார்க்க

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" - தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி. இப... மேலும் பார்க்க

LSG vs DC: "ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்தான் எங்களுக்குத் தேவைப்பட்டது" - அக்சர் படேல் பெருமிதம்

ஐபிஎல் 2026 தொடரின்நேற்றைய(ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ... மேலும் பார்க்க

GT vs PBKS: "அந்தத் தருணம் தான் எங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.!" - கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரின்நேற்றைய(மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அ... மேலும் பார்க்க

RR vs CSK: "இனிவரும் போட்டிகளில் எங்க ஆட்டம் சிறப்பாக இருக்கும்!" - ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 30) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை... மேலும் பார்க்க

RR vs CSK: "இந்த வருடம் கோப்பையை வெல்வதுதான் எங்களுடைய ஒரே இலக்கு" - கேப்டன் ரியான் பராக்

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த ஸ்கோரை 12.1 ஓவர்களில் எட்டி ப... மேலும் பார்க்க