செய்திகள் :

கும்மிடிப்பூண்டி: தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்தது ஏன்?

post image

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சுதாகர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன், வேட்பு மனுவை தாக்கல் செய்ய கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். பின்னர் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர், கட்சியினருடன் அங்கு வந்தார்.

இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர், மரியாதை நிமித்தமாக தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜனுக்கு `அண்ணே... வணக்கம்' என்று கையெடுத்து கும்பிட்டார்.

பதிலுக்கு கோவிந்தராஜனும் வணக்கம் செலுத்தியபோது திடீரென சுதாகர், தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜனின் காலில் விழுந்து `அண்ணே என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க' எனக் கூறினார். அதனால் பதறிப் போன கோவிந்தராஜன், அவசர அவசரமாக சுதாகரரை தூக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

காலில் விழும் அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர்

இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். மேலும் தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்த சம்பவத்தைப் பார்த்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வேட்பாளர் சுதாகரிடம் சீனியர் நிர்வாகிகள் கேள்வி கேட்டதற்கு, தி.மு.க வேட்பாளர் என்னை விட வயதில் பெரியவர், அதனால் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்துவிட்டதாக பதிலளித்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க வேட்பாளர் காலில் விழுந்த அ.தி.மு.க வேட்பாளர் சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகியது. தி.மு.க வேட்பாளரிடம் அ.தி.மு.க வேட்பாளர் சரண் அடைத்து விட்டதாகவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதற்கு கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க-வினர், ``தி.மு.க எங்களுடைய பரம எதிரி. அந்தக் கட்சியின் வேட்பாளரின் காலில் எங்கள் கட்சி வேட்பாளர் சுதாகர் காலில் விழுந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதாகர், ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். அதைப் போல தி.மு.க வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனின் குடும்பத்தினரும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்கள். அதனால் இருவருக்கும் பிசினஸ் டீலிங் இருக்க வாய்ப்புள்ளது. மரியாதை நிமித்தமாகவே காலில் விழுந்ததை சிலர் அரசியல் செய்கிறார்கள்" என்றனர்.

தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி' - பாஜக-வில் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமை, அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தை தஞ்சாவூர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இது, பா.ஜ.க-வின்... மேலும் பார்க்க

'ஐந்தே ஐந்து' வாக்காளர்கள்தான்; அங்கேயும் வாக்குச்சாவடி; தமிழ்நாட்டின் வித்தியாச வாக்குச்சாவடிகள்!

ஒவ்வொரு தேர்தல் தேதிகளிலும், 'காலையில் போனால் கூட்டமிருக்காது... வரிசையில் நிற்கத் தேவையில்லை...', 'இப்போது போனால் கூட்டமிருக்காது... அப்போது போனால் கூட்டமிருக்காது' என்று வெயிலில் இருந்து தப்பிக்கவும... மேலும் பார்க்க

மயிலாப்பூரில் தமிழிசை; அவிநாசியில் எல்.முருகன் - வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நயினார் நாகேந்திரன் சாத்தூர், கோவை வடக்கு வானதி சீனிவாசன், விஜயதாரணி விளவங்கோடு, தமிழிசை மயிலாப்பூர் போன்ற தொ... மேலும் பார்க்க

கைவிட்டுப் போன சோளிங்கர் தொகுதி; கடுப்பான அமமுக என்.ஜி.பார்த்திபன் திமுக-வில் ஐக்கியம்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க த... மேலும் பார்க்க

`இன்று மேம்பாலம், நாளை மின் உற்பத்தி மையங்கள்' - ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரானின் பதில் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அடுத்து வரும் சில வாரங்களில் ஈரானின் மீதான தாக்குதல் தீவிரம் அடையும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்... மேலும் பார்க்க

நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - என்ன காரணம்?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க