செய்திகள் :

"தோனி, கபில் தேவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.!" - தந்தை பேச்சால் யுவராஜ் சிங் வேதனை

post image

தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறி வரும் கருத்துகளுக்காக்க தோனி மற்றும் கபில் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இடம்பெற்றிருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.

இருப்பினும் எதிர்பாராத சூழல்களால் யுவராஜ் சிங் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாமல் போனார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

இதனைத்தொடர்ந்து தனது மகன் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு தோனிதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம்சாட்டி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அதேபோல முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

1980-களில் கபில் தேவ் தன்னை மிரட்டியதாகவும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த யுவராஜ் சிங்கிடம் தனது தந்தையின் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

தோனி - கபில் தேவ்
தோனி - கபில் தேவ்

அதற்கு யுவராஜ், "நான் தோனி மற்றும் கபில் தேவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் தந்தை பேசுவதை நான் ஆதரிக்கவில்லை. இது சரியல்ல என்று என் தந்தையிடமே நான் கூறிவிட்டேன்.

மேலும் 2017-ஆம் ஆண்டு நான் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கானக் காரணத்தை தோனி என்னிடம் வெளிப்படையாகப் பேசி விளக்கினார்" என பதிலளித்திருக்கிறார்.

SRH vs KKR: "அந்த கடின உழைப்புக்கு கிடைத்த பலன்தான் இது.! - ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியான நேற்று (ஏப்ரல்.2) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்மோதின. இதில் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார... மேலும் பார்க்க

SRH v KKR: ``இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை.!" - தோல்வி குறித்து கேப்டன் ரஹானே

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்நேற்று(ஏப்ரல் 2)மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்... மேலும் பார்க்க

IPL: "டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆடிய விதம் இருக்கே.!" - கேப்டன் இஷான் கிஷன் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்நேற்று(ஏப்ரல் 2)மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்... மேலும் பார்க்க

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" - தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி. இப... மேலும் பார்க்க

LSG vs DC: "ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்தான் எங்களுக்குத் தேவைப்பட்டது" - அக்சர் படேல் பெருமிதம்

ஐபிஎல் 2026 தொடரின்நேற்றைய(ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ... மேலும் பார்க்க

GT vs PBKS: "அந்தத் தருணம் தான் எங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.!" - கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரின்நேற்றைய(மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அ... மேலும் பார்க்க