செய்திகள் :

SVC63: 'வாரிசு' பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் - வெளியான அப்டேட்!

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில் ஆஃப் கல்வான்' என்று இருந்தது.

சமீபத்தில்தான் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. அதோடு கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து சல்மான் கான் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். இன்று புதிய படம் பற்றிய அறிவிப்பை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதிய படத்திற்கு `SVC63' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் கூட்டணியில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.

இன்று சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக மும்பையிலும், அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

படத்தை அடுத்த ஆண்டு ஈத் பண்டிகைக்கு திரைக்குக் கொண்டு வர சல்மான் கான் திட்டமிட்டுள்ளார். `SVC63' படத்தின் மூலம், வம்சி பைடிப்பள்ளியுடன் இணையும் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை சல்மான் கான் பெறுகிறார்.

வம்சி தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றிய ஒரு வலுவான பின்னணியைக் கொண்டவர். அதிரடி ஆக்ஷன் படங்கள் மற்றும் உணர்ச்சிகரமான குடும்பக் கதைகளை சமமாக கையாளுவதில் அவர் வல்லவர். நடிகர் விஜய் நடித்த வாரிசு படம், நடிகர் மகேஷ் பாபுவின் விவசாயம் சார்ந்த மகரிஷி, தோழா போன்ற முக்கிய படங்களை இயக்கி இருக்கிறார்.

Abhishek Bachchan: "அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!" - பாடமெடுக்கும் அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் தற்போது ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்... மேலும் பார்க்க

`ஆப்ரேஷன் சிந்தூரை மையப்படுத்தியது'- அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'தி வாசின் வார்' உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது அவருடைய அடுத்த படத்தை இயக்குவதற்கும் தயாராகிவி... மேலும் பார்க்க

Mrunal Thakur: "அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்" - மிருணால் தாகூர்

மிருணால் தாகூர் நடித்திருக்கும் 'டகாய்ட் (Dacoit)' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட விதம் பற்றி இப்படத்திற்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்க... மேலும் பார்க்க

Dhurandhar The Revenge: "ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட.!" - சாடும் திரைக்கதையாசிரியர்!

துரந்தர் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க

சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு ரசிகர்கள் வரவேற்பு

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். அவரை கோர்ட் அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதுங்கி இருந்... மேலும் பார்க்க

Dhurandhar The Revenge Review: ஆக்ஷன் த்ரில்லர் போர்வையில் 'மோடி' பிரசார சினிமா; திரையனுபவம் எப்படி?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் மொத்த அதிகார மையத்தையும் ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்குள் ஊடுருவி, அதில் ஒவ்வொரு படிநிலையாக உயரும் இந்திய உளவாளியின் கதையைச... மேலும் பார்க்க