செய்திகள் :

கலையாத கனவுலகம்: டூரிங் டாக்கீஸ் முதல் மல்டிபிளக்ஸ் வரை!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சினிமா..

பலருக்கு அலர்ஜி

சிலருக்கு எதிரி

இன்னும் சில பேருக்கு அதன் அர்த்தமே தெரியறதில்ல ...

மொத்தத்தில் சினிமா பார்த்தாலே (அதுவும் தியேட்டர்ல) தெய்வ குத்தமாயிடும்ன்னு நினைக்கிறவங்க தான் இங்கு நிறைய பேர்.

சினிமாவை நீங்கள் எப்படி? எதில் ?பார்க்கிறீர்கள் என்பது முக்கியம்.

சினிமாவை திரையரங்கில் பார்ப்பது பிடிக்கும்ன்னா அதுவே உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும்.

அதை ஒரு அலுப்புடனோ, சலிப்புடனோ, பார்த்தால் மன அழுத்தமாகவே மாறும்.

பிடித்து செய்தால் எந்தக் காரியமும் நம் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியதே!

பொழுதுபோக்கின் தவிர்க்க முடியாத அங்கம் சினிமா. காலம் கடந்தாலும் நம்மோடு தொடர்ந்து வரும் கலையாத கனவுலகம் .

அது .கடந்து வந்த பாதையை காலத்தின் கண்ணாடியாய் நின்று சொல்லிக் கொண்டிருந்தது தான் டூரிங் டாக்கீஸ்.

பெரிய கீற்றுக் கொட்டகை நல்ல ஆற்று மணல் பரப்பிய தரையில் படம் பார்க்கும் சுகமே தனி ( வசதியானவர்களுக்கு பெஞ்ச்)

டூரிங் டாக்கீஸ் கீற்று கொட்டகை டென்த் கொட்டகை அவ்வளவு ஏன் செல்லப் பெயரிட்டு அழைத்த எத்தனையோ திரையரங்குகள் இன்றைக்கு அழிந்து போனாலும் அவற்றில் படம் பார்த்த நினைவுகள் அழியவில்லை.

என்னதான் வீட்டுக்குள்ளேயே ஓடிடி டியில் திரைப்படங்கள் வந்தாலும் திரையரங்குக்குச் சென்று மக்களோடு மக்களாக விசில் அடித்து, கைத்தட்டி நகைச்சுவை காட்சிகளுக்கு மனம் விட்டு சிரித்து ,வில்லன் வந்தா திட்டி பச்சை சிவப்பு நிற நோட்டீசுகளை திரையில் பறக்கவிட்டு .. படம் பார்ப்பது என்பது வேற லெவல் ஃபீல்.

வீட்டில் எவ்வளவோ வேலைகள் செய்தாலும் தியேட்டருக்கு சென்றுஒரு சினிமா பார்த்தால் புதுவிதமான எனர்ஜி வந்துவிடும் . வேலை, கடமை இத்தியாதி களுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது போல், இசை கேட்பது போல்தான் அதுவும் அது ஒரு விதமான தியான நிலை ,

நமக்கான மகிழ்ச்சியை ரொம்ப பெரிய விஷயத்துக்கு பின்னாடி எல்லாம் வச்சிக்க கூடாது நமக்கு ரொம்ப பிடிச்ச சினிமாவை தியேட்டர்ல பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாடுற அளவுக்கு எளிமையா வச்சுக்கணும் .

அப்பதானா வாழ்க்கை இனிக்கும்..

நான் சின்ன வயசுல  இருந்தே    தியேட்டருக்குச் சென்றுதான்  சினிமா பார்ப்பேன். எத்தனை மன கஷ்டங்கள் பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கலாம் ன்ற தைரியம் அப்ப வரும். மனசு ரிலாக்ஸா இருக்கும்.

.
அடுத்தவங்க ஏதாவது நினைச்சிடுவாங்களோன்னு எப்போதெல்லாம் நாம் நம்மை மாற்றி கொள்கிறோமோ அப்போதெல்லாம் நாம் தோற்று விடுகிறோம் என்பதே உண்மை. 

எப்பவும் நாம் நாமாகவே இருப்போம் அதுதான் அழகும் கூட! தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது என்பது ஒரு 'தெரபி' மாதிரி தான்.

எடப்பாடி சக்தி,மேட்டூர் கற்பகம் லக்ஷ்மி தியேட்டர்'sதர்மபுரி மாதேஸ்வரா, ரத்னா ,கணேசா, சென்ட்ரல் தியேட்டர்'s
வளவனூர் அண்ணா திரையரங்கம் (சினிமா விமர்சனம் எழுதத் என்னை தூண்டிய திரையரங்கம் வாழ்வில் மறக்க முடியாத தியேட்டர்) பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.

அழகான நொடிகளுக்குள்ளேயே பயணிக்கிறது

சில பல திரைப்படங்கள்

அழகிய நினைவலைகளாய்!

விழுப்புரம் சாந்தி ,கல்யாண், முருகா, சீதாராம் தியேட்டர்'s சென்னை... கமலா, ஆல்பர்ட் பேபி ஆல்பர்ட் உதயம், ரோகிணி அமைந்தகரை லக்ஷ்மி, முரளி கிருஷ்ணா ஏவிஎம் , தி நகர் கிருஷ்ணவேணி லிபர்ட்டி பூந்தமல்லி ஹை ரோடு சங்கம் பத்மம், ரூபம் ,ஈகா அனுஈகா, ராம் தியேட்டர், சூளை நடராஜா தியேட்டர் ... இப்படி நிறைய திரையரங்குகள்

நிறைய திரைப்படங்கள் .. 

அழகான ஞாபகங்கள்.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய  stressbuster தியேட்டருக்குச் சென்று திரைப்படங்கள் பார்ப்பது தான்.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்

தேர்தல்

பொன்னியின் செல்வனும் நானும்! - பயணக் குறிப்பு -1

வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்... மேலும் பார்க்க

அகல் விளக்கும் அந்த ஒற்றைப் பென்சிலும்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஹார்மோன்களும் மகிழ்ச்சியும்: உள்ளத்தின் வேதியியல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இலக்கியக் கடலில் ஒரு முத்து: கலைமகள் 95வது ஆண்டு சிறப்பு மலர் மதிப்பாய்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எங்க அப்பாரு! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பெண்களின் கண்டுபிடிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுவதா? - பெண்களின் உரிமைக்காக போராடிய முன்னோடி