செய்திகள் :

எங்க அப்பாரு! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நீரவ் பள்ளி முடிந்து வெளியில் வந்தான். 

அழைத்துச்செல்ல  கார் இன்னும் வரவில்லை.

அவனது பார்வை வழக்கம் போல எதிரில்  உள்ள பஸ் நிலையத்தை கூர்ந்து பார்த்தது. இது தினசரி நடக்கும்  அனிச்சை செயல்.

அந்த சிறுவன் பாடப்புத்தகப்பையை முதுகில்  தாங்கியபடி  ஆடிக்கொண்டே வந்தான். தோற்றத்தில்  ஏழ்மை தெரிந்தாலும்  முகத்தில் நடையில் சந்தோக்ஷத்துள்ளல்  தெரிந்தது. சுற்றுமுற்றும் ரோட்டைச் துளாவிய அவனது தேடல் அருகில்  இருந்த   பெட்டிக்கடையில் நின்றது.

'என்ன  நல்ல தம்பி    உன் அப்பாரு இன்னும்  வரல்லையா?  பரவாயில்ல  வா. 

வழக்கமா வாங்கற தேன் மிட்டாயும்  கமர்கட்டும் தர்றேன்.அப்பாரு வந்ததும்காசு வாங்கிக்கிறேன்'  என்றார் கடைக்காரர்.

  '  வேண்டாண்ணா.இன்னைக்கு ஊர்லேருந்துஅத்தை மாமா   அப்புறம் பசங்க எல்லாம் வர்றாங்க.

நிறையத் தின்பண்டங்க வாங்கிட்டு வருவாங்க.

அப்பாரு அதனால  தான் லேட்டு. ஆ....அ தா வந்துட்டாரு.  ' என்றான் நல்லதம்பி.

அவனது சந்தோக்ஷத்தை கண்ட  நீரவ் முகம் வாடியது.'எப்படி இவன் இத்தனை  சந்தோக்ஷமாக இருக்கான். நிறைய சொந்தக்காரங்க எங்கிருந்து வந்தாங்க. தாத்தா எப்படி தினமும் வந்து கூப்பிட்டுப் போறாரு?

எனக்கு ஏன் இப்படி இல்ல. டிரைவர் மட்டுமே வர்றாரு? "என்று யோசித்தான்.

நீரவ் வின் குழப்பமான முகத்தைக் கண்ட அப்பாரு  பேரனைக் கூப்பிட்டு'டேய் கண்ணூ  நல்லூ!

அந்தப்பையன்  உன்னையே பாக்குறான்  பாரு.

தினமும்  நான் பாக்குறேன்.அவன் உன்கிட்ட

ஏதோ கேக்க  நினைக்கறான் போல.கிட்டக்க போய் பேசிப்பாரு.' என்றார்.

போ அப்பாரு ..அவன்   அந்தா தெரியுதுல்ல  அந்த  பெரிய பிரைவேட் பள்ளிக்கூடத்துல  படிக்கிற பையன்.

அவன் கிட்ட  நான் எதுக்கு பேசணும்? வா வீட்டுக்குப் போலாம்.

அத்தை மாமால்லாம் வந்துட்டாங்களா?  என அவசரப்பட்டான் நல்லதம்பி.

கொஞ்சம் பொதுவா போலாம் நல்லூ...அவங்க அடுத்த பஸ்லே தான் வருவாங்க , வா, அந்தத் தம்பி கிட்ட பேசிட்டு  வரலாம். போய் ரெண்டு லாலிபாப் மிட்டாய் வாங்கிட்டு பின்னாலே வா,  என்று சொல்லிட்டு  நடந்தார் சின்னப்பன் அப்பாரு. பெரியவர் தன்னை நோக்கி வருவதைக் கண்ட நீரவ்  முதலில் கொஞ்சம் பயந்தான்...

 பின்னர் அவரது சிரித்த முகத்தை கண்டவுடன் சிநேகமாய்  சிரித்தான்.

    ஏஞ்சாமி  தனியா  உக்காந்திருக்கே?

  கூப்பிட்டுப்போக யாரும் வர்லையா?  

உன்னோட முகத்திலே ஒரு வருத்தம் இருக்கிறதை நான் தினமும் பார்க்கறேன்.... அதான் கண்ணு இன்னைக்கு என்னன்னு தெரிஞ்சுக்கலான்னு  வந்தேன்  என்றார்   அப்பாரு.

       இதற்குள்  லாலிபாப்  வாங்கிக்

கொண்டு நல்லதம்பியும் வந்துவிட்டான்.

      இந்தா  அப்பாரு  லாலிபாப்   என்று நீட்டினான்.

அட   எனககெதுக்கடா   இதெல்லாம். தம்பிக்கு குடு.கமர்கட்டும் தேன் மிட்டாயுங் கூட  வாங்கிட்டு வந்துடடியா ? கட்டிட்டு வான்னா வெட்டிட்டு   வர்ற குறும்பன்  நீ தாண்டா  

என்று கூறி விட்டு நீரவ் பக்கம் திரும்பி  வாங்கி சாப்பிடு  தம்பி... அப்பிடியே உனக்கென்ன கவலையின்னு இந்த

அப்பாருகிட்ட சொல்லு என்றார். அப்ப  நானும் உங்களை அ அப்பாருன்னு   கூப்பிடலாமா  என்று முகம்   மலரக்கேட்டான்  நீரவ்.

 தாராளமா உனக்குப் பிடிச்ச மாதிரி எப்பிடி வேண்ணாலும்  கூப்பிடு கண்ணூ என்றார்  அப்பாரு..

    ஒண்ணுமில்லை அப்பாரு. நீங்க  டெய்லி  ஈவ்னிங் வந்து இவனை கூட்டிட்டுப் போறீங்க... ஸ்நாக்ஸ் வாங்கி  கொடுக்கிறீங்க.. இவன்உங்க கையை பிடிச்சிட்டு  குதிச்சிட்டே  போறா ன். எனக்கு அப்படி யாருமே இல்லை... அதுதான்  இவனைப் பார்க்கும்போது   எல்லாம் ஏக்கமாக,பொறாமையாக இருக்குது  என்றான்.

நீரவ் அப்பாரு என்று அழைத்ததும் தன்னைப்பற்றி   பொறாமைப்பட்டதும் நல்லதம்பிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.  இருந்தாலும் அப்பாரு முகத்துக்காக  பேசாமல் இருந்தான். 

ஏஞ்சாமி!  உங்க வீட்டுலே பெரியவங்க யாருமில்லையா? தாத்தா , பாட்டி, அப்பா அம்மால்லாம் என்ன பண்றாங்க  ,எங்கிருக்காங்க விவரமா சொல்லப்பா  என்றார்  அப்பாரு..

       அப்பா பிஸினஸ்  பண்றார். அம்மா லேடீஸ் கிளப், சோசியல்சர்வீஸ்,  யு டியூப்  மீடியா ன்னு  வெளியிலேயே இருப்பாங்க. தாத்தா  பாட்டி ரெண்டு பேரும் சீனியர் சிட்டிசன் வில்லாவில் இருக்காங்க.  

     சொல்லும்போதே அழுகை பொங்கி வந்து நீரவ் கண்களில் நீர் வழிந்தது..

  இதைக்கண்ட  நல்லதம்பிக்கு  அவன் மேலிருந்த எரிச்சல் மறைந்து பரிவும் அன்பும் மேலோங்கியது.

நீரவ் அருகில் நகர்ந்த அப்பாரு அவனைத் தன் மீது சாய்த்துக் கொண்டு  அழுவாதே கண்ணு! வீட்ல  உன்னைய யாரு பாத்துக்கறாங்க  என்று கேட்டார்.

      வீட்டில்  வேலைக்காரர்கள்  ,சமையல்காரர்கள்  டிரைவர்கள் எல்லாம் இருக்காங்க. பார்த்துப்பாங்க. இப்பக்கூட  டிரைவருக்காகத்  தான்  வெயிட்  பண்றேன்    என்றான் நீரவ்.

     உனக்கு   அண்ணா  தம்பி அக்கா தங்கச்சி அத்தை பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா  சித்தி அவங்களுடைய குழந்தைகள் யாருமே வீட்டுக்கு  வரமாட்டாங்களா நீயும் யார் வீட்டுக்கும் போகமாட்டியா என்று நல்லதம்பி கேட்டான்.

    ஊஹும்  ....  எங்க  மம்மி  ஒரே பொண்ணு.அந்தத் தாத்தா  பாட்டி   எப்பவும்  கோயில் யாத்திரை ன்னு டூர்லேயே  தான் இருப்பாங்க. அப்புறம் அப்பாவோட தங்கை அவங்க வெளி நாட்டுல  இருக்காங்க.. தாத்தா பாட்டியும்   ஹோம்லே. அவங்க  எங்க வீட்டுக்கு வர  எங்க மம்ம அலவ்   பண்ண மாட்டாங்க. 

பரிதாபமாக சொன்னான் நீரவ்.

எங்க வீட்டில் அப்படியில்லை.  சின்னவீடு தான். ஆனா நிறையப்பேர் இருக்கோம். எப்பவும் கூச்சலும் 

கும் மாளமும் சிரிப்பும்  சண்டையும் சமா தானமும் இருக்கும். அப்பாரும் அப்பத்தாவும் அடிக்கடி அதட்டிட்டும் புத்தி சொல்லிட்டும்  இருப்பாங்க..

இதை விட ஸ்கூல்  லீவ் விட்டா மாத்தி மாத்தி எல் லாரும்  கூட்டாக சேர்ந்து எல்லா சொந்தக்காரங்க  வீட்டுக்கும் போயிடுவோம்.. எல்லாப் பண்டிகைக்கும் திருவிழாக்கும் ஒன்னு கூடிடுவோம்.  ஒரே ஜாலி தான்  கேலிதான்..

      பெருமையாக  சொன்னான் நல்லதம்பி.

அவனை பேச வேண்டாம்  என அடக்கினார் அப்பாரு.

 நீரவ் கண்ணா நீ வருத்தப்படாதே.

அழுவாதே. 

 டிரைவர் வர்ற வரைக்கும் நாங்க கூடவே  இருக்கோம். இன்னைக்கு மட்டுமில்லே தினமுமே.. கண்ணைத் தொடச்சுக்கோ சந்தோஷமா இரு என்றார்.

      இல்ல அப்பாரு அடுத்தவாரம் என்னோட பெர்த் டே வருது. என்ன தான் பெருசா பார்ட்டி எல்லாம் வெச்சு  அமர்க்களப்படுத்தினாலும் என்னோட தாத்தா பாட்டி  சொந்தக்காரங்க  இல்லாமல் இருந்தா எனக்கு கஷ்டமாக  தானே இருக்கும்.

நீங்களும் நல்லதம்பியும் எனக்காக வர்றீங்களா  அப்பாரு  என்றான்நீரவ்.

மின்னல் வெட்டியது போல் ஒருபொறி தட்டியது  அப்பாருக்கு..

பெருசா பார்ட்டி கொண்டாடுவாங்களா உன் மேல அவ்வளவு பாசமா  அவங்களுக்கு?

  ஆமாங்க அப்பாரு.. நான் சிங்கிள் சைல்டு. என்கிட்ட   நிறைய அன்பு  உண்டு. ஆனால் என்னைக்  கூட  கவனிக்காமல்  ஓடிகிட்டே இருக்காங்க எனக்காக த் தான் இப்படி பாடுபடறோம் னு  சொல்வாங்க.

எது   எப்ப  எங்கே  கேட்டாலும்  உடனே வாங்கித்தருவாங்க.

அப்ப இந்த வருக்ஷம்  உன்னோட பிறந்த நாள் பரிசாக  உன் தாத்தா பாட்டி தான் வேணுமின்னு அடம்பிடிச்சு கேளு. அவங்க இருக்கற வரைக்கும் உன்கூடத்தான் இருக்கணும் ன்னு  வற்புறுத்திப்பாரு. இல்லேனா  பார்ட்டியே வேண்டாம்னு மறுத்திடு. பிடிவாதமாக  இரு.நல்லது ஏதாச்சும்  நடக்கும். இதை இன்னைக்கே தொடங்கிரு.நாளைக்கு வந்து நடந்ததை  சொல்லு என்றார் அப்பாரு.

  நீரவ் முகம் மலரச்சிரித்தான். அவனிடம் கவலை மறந்த ஒரு தெளிவு தெரிந்தது.

அதோ   கார் வந்துடுச்சு.தே ங்க்ஸ் அ அப்பாரு  தேங்க்ஸ்  நல்லதம்பி. இனிமேல் நாம  ரெண்டு பேரும் திக் பிரண்ட்ஸ் . சந்தோஷமாக  கை கொடுத்தான் நீரவ்.

ஸாரி தம்பி! எதிர் பாராத டிராஃபிக் ஜாம்.இப்ப தான்    சரியாச்சு.

பயந்துட்டியா தம்பி என்றார் டிரைவர்.

   இ ட்ஸ்  ஓ கே  அங்கிள். ஒன்னும் பிரச்னை இல்லை போகலாமா  அங்கிள் என்ற நீரவ்   அப்பாரு 

நல்லதம்பி  இருவரிடமும் கண்ணைக் காட்டி விடை பெற்றான்.

அடுத்த  நான்காம் நாள் மாலை  நீரவ்வை  அழைத்துச்செல்ல  டிரைவருடன் அவன் தாத்தாவும் வந்திருந்தார். 

அப்பாரின் கையைப்பிடித்து நன்றி சொன்ன நீரவ் தாத்தா  பிறந்த நாள் விழாவுக்கு  வீட்டார்  அனைவரையும் அழைத்துக்கொண்டு  வருமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

நீரவ்  வலது கை விரல்களை மடக்கி  பெரு விரலை  உயர்த்தி வெற்றி  சைகை காட்டினான்.   நல்லசிவம் பெருமிதத்துடன்  அப்பாருவின் கையைப்பிடித்து குதித்துக்கொண்டு  பெட்டிக்கடை நோக்கி  சென்றான்.

-நீலவேணி  தேவராஜன்

கோயமுத்தூர்

தேர்தல்

பெண்களின் கண்டுபிடிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுவதா? - பெண்களின் உரிமைக்காக போராடிய முன்னோடி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தொடர்ந்திடும் பந்தம்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"நவீன தமிழை 30 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளும்" - ஞானபீட விருது குறித்து ஜெயமோகன்

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.எழுத்தாளர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்... மேலும் பார்க்க

விகடனில் தொடராக வெளிவந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது!

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழின் மூத்த படைப்பாளியும், கலை இலக்கியச் செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் எழு... மேலும் பார்க்க

"இந்தக் குறை என்னால் கழிந்தது" - ஞானபீடம் விருது குறித்து கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந... மேலும் பார்க்க

அம்மாவைத் தேடி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க