செய்திகள் :

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

post image

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டத்தில், 'நமக்கு 5 சீட்டு 6 சீட்டுனு வெளியே பேசிக்கிறாங்க. அதெல்லாம் வதந்தி. நமக்கு கௌரவமான எண்ணிக்கையில சீட் கிடைக்கும்' என பிரேமலதா பேசியிருப்பதால் மா.செக்கள் குஷியாகியிருக்கின்றனராம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த கூட்டத்தில் என்னவெல்லாம் பேசப்பட்டதென மா.செக்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். 'நீண்ட நாள் கழித்து அண்ணியார் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். அதிமுக கூட்டணியில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசினார். ராஜ்யசபா உத்தரவாதம் கொடுத்துவிட்டு இல்லை என்றது தொடங்கி, எங்களின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அந்தக் கூட்டணியில் சரியாக மரியாதை இல்லாதது வரைக்கும் எல்லாவற்றையும் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், மா.செக்கள் விரும்பியபடியே திமுக கூட்டணிக்காக முயன்று வெற்றிகரமாக முடித்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறினார். குறிப்பாக, வெளியில் பேசப்படுவதைப் போல தேமுதிகவுக்கு 5-6 சீட்கள் என்பதை வதந்தி என உறுதி செய்தார். 'நமக்கு கௌரவமான ஒரு எண்ணிக்கையில் சீட்டை பேசி முடித்திருக்கிறோம்' என்றார். மேலும், உள்ளாட்சியிலும் 10-15% இடங்களுக்கு உத்தரவாதம் கேட்டுதான் கூட்டணியை முடித்திருக்கிறோம். அதனால் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சியில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்குமென நம்பிக்கை ஊட்டினார்.

பிரேமலதா
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரேமலதா

விசிகவும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாள் நாம் திமுகவுடன் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிடுவோம் என்றும் அழுத்தமாக கூறினார்' என்றனர்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கின்றனர். மாவட்டச் செயலாளர்கள் சார்பில் திமுகவுடன் கூட்டணி பேசி ராஜ்ய சபா சீட்டையும் வாங்கி வந்ததற்காக கூட்டாக நன்றி கூறப்பட்டிருக்கிறது.

'5-6 சீட்டுனு வர்ற செய்தியெல்லாம் வதந்தினு சொல்றது மூலமா விசிக, கம்யூனிஸ்ட்டை விட அதிக தொகுதிலதான் நிக்கபோறோங்றதை அண்ணியார் குறிப்பால உணர்த்துறாங்க' என குஷியாகின்றன தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள்.

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இதுவரைக்கும் ஊழல் ... மேலும் பார்க்க

`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' - தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க