திடீரென டிஜிபி அலுவலகத்தில் விஜய்; யார் மீது புகார் கொடுத்தார்? - விவரம் என்ன?
Abhishek Bachchan: "அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!" - பாடமெடுக்கும் அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன் தற்போது ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு விருது நிகழ்வில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சன் விமர்சனங்கள் தொடர்பாகவும், அவருடைய கரியரின் தொடக்க நாள்களில் அதனை எப்படி புரிந்துகொண்டார் எனவும் பகிர்ந்திருக்கிறார்.
அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம். அதை எதிர்மறையான ஒன்றாகப் பார்க்கிறோம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. நான் பிசினஸ் இருக்கும் ஒரு கலை வடிவத்தில் பணியாற்றுகிறேன்.
மக்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் என் படங்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நான் அவர்களுக்கு பொறுப்பானவனாக இருக்க வேண்டும். நான் விமர்சனத்துக்கு திறந்தவனாக இருக்கிறேன்.
என் கரியரின் ஆரம்பத்தில் நான் இப்படி உணரவில்லை. பெரும்பாலான நடிகர்களைப் போல, எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்பினேன்.

விமர்சகர்கள் என் வேலையைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அதை மதிப்பிடுவதற்கு தகுதியற்றவர்கள் என்று நினைத்தேன். நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்.
விமர்சகர்கள் என் எதிரிகள் அல்ல என்பதையும் அப்போது உணர்ந்தேன். அவர்களின் பின்னூட்டம் என்னை ஒரு நடிகனாக மேம்படுத்த உதவியது. அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!” எனக் கூறியிருக்கிறார்.


















