செய்திகள் :

"நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்.!"- திமுக-வின் தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக அர்ஜுனராஜ்

post image

திமுக தங்களுக்கு கொடுத்த எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக தங்களுக்கு வருத்தம் உள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தெரிவித்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வைகோ, ஸ்டாலின்
வைகோ, ஸ்டாலின்

மீதமுள்ள 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.

அதேபோல மதிமுக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக-வுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

வைகோ - மதிமுக
வைகோ - மதிமுக

அப்போது அவர், "எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. நான்கு தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில் போட்டியிட முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

"எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!"- வேல்முருகன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வே... மேலும் பார்க்க

`கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்?' - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட களம்!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்... மேலும் பார்க்க

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடை... மேலும் பார்க்க

மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! - பெரம்பலூரில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் தொகுதி பாஜக-வுக்கு.! `5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்' - அதிமுகவினர் ஆதங்கம்!

அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக சரவணன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக சில மாதங்களுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பச்சை கொட... மேலும் பார்க்க

முட்டி மோதும் நிர்வாகிகள்; நண்பரைக் களமிறக்கும் விஜய் டு சீமானுக்கு ஜோதிடரின் அறிவுரை! | கழுகார்

அறுபடை வீட்டில் ஆரம்பித்த சீமான்!ஜோதிடரின் அறிவுரை...தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிவிட்டுதான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் நா... மேலும் பார்க்க