பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த ...
பங்குச் சந்தை இறக்கம்... இப்போது என்ன செய்ய வேண்டும்? - சுனில் சுப்பிரமணியம் காட்டும் வழி!
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாகவே உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுள்ளன. இந்தியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 8.54%, சென்செக்ஸ் 8.51% அளவுக்கும் இறக்கம் கண்டுள்ளன. ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாகப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் பல ஆயிரம் ரூபாய்களை இழந்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தவர்களும் சில ஆயிரங்களை இழக்கவே செய்திருக்கிறார்கள்.
இந்த நஷ்டத்தைப் பார்த்து முதலீட்டாளர்கள் கலங்கி நிற்கும் நிலையில், இனி முதலீட்டாளர்கள் என்ன மாதிரியான முதலீடு அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மூலம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ சுனில் சுப்பிரமணியம். அவர் பேசியதன் சுருக்கம் இனி...

ஏற்ற, இறக்கத்தில் சந்தை...
''அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாக பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுவருகின்றன. 26000 புள்ளிகளுக்கு மேல் இருந்த நிஃப்டி, இப்போது 23500 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக இறக்கம் கண்டுவந்த பங்குச் சந்தை, இப்போது அமெரிக்க அதிபர் அறிவித்திருக்கும் தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக, கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை அன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி முடிந்திருக்கிறது. இந்த ஏற்றத்தைப் பார்த்து, இனி பங்குச் சந்தை மேல்நோக்கி செல்லத் தொடங்கிவிடும் என்று சொல்ல முடியாது. காரணம், போரினால் ஏற்பட்ட நிலைமை பெரிய அளவில் மாறிவிடவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேலேயே இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில், சந்தையின் இந்த ஏற்றம் தொடர்ந்து நிலைத்து நிற்குமா என்பது வெள்ளிக்கிழமை அன்றுதான் தெளிவாகும்!

என்ன செய்ய வேண்டும்?
இப்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பார்த்து முதலீட்டாளர்கள் பயந்து போய் முதலீட்டை விற்றுவிட நினைக்கக் கூடாது. நீங்கள் செய்திருக்கும் முதலீடு சரியாகத்தான் இருக்கிறதா என்பதை அலசி ஆராய வேண்டிய நேரம் இது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்தப் பணம் தேவை இல்லை என்கிற மாதிரி உங்கள் பணம் இருந்தால், அதை இப்போது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஆடித் தள்ளுபடி போல நல்ல தள்ளுபடியில் பங்குச் சந்தை இப்போது இருக்கிறது. இந்த நேரத்தில் தள்ளுபடியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, பங்குச் சந்தையில் இருந்து விலகி நிற்க நினைக்கவே கூடாது.
இப்போது எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தவே கூடாது. தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலமும், அதிகமாக முதலீடு செய்வதன் மூலம் சந்தை உயரும்போது நல்ல லாபத்தை நம்மால் அடைய முடியும்! ஒரு வேளை, மேற்கொண்டு முதலீடு செய்வதற்கு உங்களிடம் பணமே இல்லை என்றால், நீங்கள் கொஞ்சம் பொறுமையாக வேடிக்கை பார்க்கலாமே தவிர, பதற்றமான இந்த நேரத்தில் நீங்கள் எந்த விதமான முடிவை எடுத்தாலும், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவே வாய்ப்புகள் அதிகம்.

அசெட் அலோகேஷன் முக்கியம்!
பொதுவாக, ஒரே சொத்தில் நம்முடைய அனைத்துப் பணத்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது. எந்தச் சொத்து எப்போது எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்று சொல்ல முடியாது. நம்முடைய முதலீட்டை பங்குச் சந்தை, தங்கம் மற்றும் வெள்ளி, கடன் சந்தை எனப் பிரித்து முதலீடு செய்வதால், நம்முடைய நஷ்டத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். பங்குச் சந்தையில் மட்டுமே நீங்கள் முதலீடு செய்திருந்தாலும், நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கிற்கு ஏற்ப லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது அவசியம்'' என்று சுனில் சுப்பிரமணியம் சொன்னார்.
கொசுறு செய்தி: பங்குச் சந்தையின் செயல்பாடுகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு எளிய தமிழில் எடுத்துச் சொல்லும்படி தினமும் வீடியோக்களை வெளியிடுகிறார் சுனில் சுப்பிரமணியம். Accidental Investor Prince என்கிற தலைப்பில் யுடியூப் சேனலை நடத்திவரும், பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பற்றி நீண்ட மற்றும் சுருக்கமான (Long & Shorts) வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். லிங்க்ட்இன் வலைதளத்தில் Sense and Simplicity என்கிற பெயரில் பங்குச் சந்தை தொடர்பான தனது கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இந்த யூடியூபையும், லிங்க்ட்இன் வலைதளத்தையும் தொடர்ந்து ஃபாலோ செய்து படிப்பதன் மூலம் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.


















