செய்திகள் :

``அடுத்த 60 நாள்களுக்கு..." - இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

post image

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லாக்டவுன் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தியிருந்தார். அதனால், இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

மோடி
மோடி

அதில், ``மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல. அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ளதால், விநியோகச் சங்கிலியில் எந்தவித இடைவெளியும் ஏற்பட வாய்ப்பில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கையிருப்புத் திறன் 74 நாள்களாக உள்ள நிலையில், தற்போது 60 நாள்களுக்குத் தேவையான உண்மையான இருப்பு கைவசம் உள்ளது. இதில் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் நிலத்தடி குகைகளில் சேமிக்கப்பட்டுள்ள அவசர கால இருப்புக்களும் அடங்கும். இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்கி வருவதால், எரிபொருள் ஓட்டம் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை இல்லை.

காஸ் சிலிண்டர்

சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதே தவிர, அது உண்மையான தட்டுப்பாட்டால் ஏற்பட்டது அல்ல. உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது தினசரி தேவையில் பாதிக்கும் மேற்பட்டவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான எல்பிஜி சரக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு என்பது தட்டுப்பாட்டுக்கான மாற்று அல்ல. அது தூய்மையான எரிசக்தியை நோக்கிய நீண்ட காலத் திட்டம். எனவே, இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பற்றாக்குறை குறித்துத் தவறான காணொளிகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். தேவையற்ற பீதிக்கு ஆளாகி எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது விசிக? - பொதுத் தொகுதிகள் பெறுவதில் குழப்பம்!

தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 8 தொகுதிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. குறிப்பாக பொதுத் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில... மேலும் பார்க்க

'மநீம-வுக்கு 2 சீட்!' சின்னத்துக்காக போராடிவரும் கமல்ஹாசன் - இறங்கி வருமா திமுக?

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. ஆனால், உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என கமல்ஹாசனை கட்டாயப் படுத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தி.மு.க - ம.நீ.ம இடையே என... மேலும் பார்க்க

'விசிக-வுக்கு 8 தொகுதிகள்!' சம்மதித்த திமுக.! ஒப்பந்தமாகும் கூட்டணி?

தி.மு.க - வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ... மேலும் பார்க்க

காவல்துறை நம் நண்பனாவது எப்போது? - ஆணாதிக்க அணுகுமுறைக்கு வேண்டும் முற்றுப்புள்ளி!

காவல் நிலையத்துக்கு பொது மக்கள் செல்லத் தயங்குவது, பெண்கள் அந்த திசையையே தீங்காக நினைப்பது எல்லாம் மாற்றப்பட வேண்டிய மனநிலை. ஆனால், அது மக்கள் மனதில் மேலும் மேலும் கெட்டிப்படும் வகையில்தான் நடந்துகொள்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலை... மேலும் பார்க்க

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க