செய்திகள் :

எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது விசிக? - பொதுத் தொகுதிகள் பெறுவதில் குழப்பம்!

post image

தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 8 தொகுதிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. குறிப்பாக பொதுத் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் பெரும் குழப்பம் நீடிப்பதாக சொல்கிறார்கள்.

திருமாவளவன்

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிடுகிறது விடுதலை சிறுத்தைகள்.

2021-ல் 4 தனித் தொகுதிகளும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் இம்முறை கூடுதலாக இரண்டு தனித் தொகுதிகள் என 6 தனித் தொகுதிகளை வி.சி.க பெறவுள்ளது.

அதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், விழுப்புரம் மாவட்டம் வானூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் ஆகிய நான்கு தொகுதிகளை உறுதியாக பெறுகிறது வி.சி.க.

இதுபோக பொன்னேரி, ஸ்ரீபெரும்பதூர், பூந்தமல்லி, புவனகிரி, அரூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் இரண்டு தொகுதிகளையும் தேர்வு செய்யவுள்ளனராம்.

நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், "தனித் தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆனால் எந்தெந்த பொதுத் தொகுதிகளை பெறப் போகிறோம் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிறது" என்றனர்.

வி.சி.க போட்டியிடும் பொதுத் தொகுதிகள் குறித்து விவரப்புள்ளிகளிடம் விசாரித்தோம். "2021-ல் திருப்போரூர், நாகை என இரண்டு தொகுதிகளை பெற்று வெற்றியும் பெற்றது கட்சி. நாகையில் ஆளூர் ஷாநவாஸும், திருப்போரூரில் எஸ்.எஸ் பாலாஜியும் வென்றனர்.

ஆளூர் ஷாநவாஸ்

ஆனால் இந்த தேர்தலில் திருப்போரூர் தொகுதியை மீண்டும் தர திமு.க தயாராக இல்லை. அங்கே பா.ம.க களமிறங்கும் நிலையில் தி.மு.க சார்பில் இதயவர்மன் களமிறங்க வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார்.

திருப்போரூரை திரும்ப கொடுத்துவிடுங்கள் என வி.சி.க தலைமையிடமும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற முனைப்பு காட்டுகிறது. மேலும் தி.மு.க நாகை மாவட்டச் செயலாளர் கெளதமன் அமைச்சர் அன்பில் மகேஷ் வாயிலாக முயல்கிறார், தமிமுன் அன்சாரிக்கு தி.மு.க கூட்டணியில் தொகுதி கிடைத்தால் அவரும் நாகையை கேட்பார். ஆகையால் வி.சி.கவுக்கு நாகை கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.

விசிக திருமாவளவன்
விசிக திருமாவளவன்

ஆகவே வி.சி.க விரும்பும் திருப்போருர், நாகை கைவிட்டுப் போனால் ராயபுரம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், சோழிங்கநல்லூர் ஆகியவற்றில் இரண்டை தேர்வு செய்ய வாய்ப்புகள் உண்டு. ஆனால் வி.சி.க-வின் விருப்பம் என்பது நாகை, திருப்போரூரை திரும்பப் பெறுவதுதான்" என்றனர்.

'மநீம-வுக்கு 2 சீட்!' சின்னத்துக்காக போராடிவரும் கமல்ஹாசன் - இறங்கி வருமா திமுக?

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. ஆனால், உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என கமல்ஹாசனை கட்டாயப் படுத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தி.மு.க - ம.நீ.ம இடையே என... மேலும் பார்க்க

'விசிக-வுக்கு 8 தொகுதிகள்!' சம்மதித்த திமுக.! ஒப்பந்தமாகும் கூட்டணி?

தி.மு.க - வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ... மேலும் பார்க்க

காவல்துறை நம் நண்பனாவது எப்போது? - ஆணாதிக்க அணுகுமுறைக்கு வேண்டும் முற்றுப்புள்ளி!

காவல் நிலையத்துக்கு பொது மக்கள் செல்லத் தயங்குவது, பெண்கள் அந்த திசையையே தீங்காக நினைப்பது எல்லாம் மாற்றப்பட வேண்டிய மனநிலை. ஆனால், அது மக்கள் மனதில் மேலும் மேலும் கெட்டிப்படும் வகையில்தான் நடந்துகொள்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலை... மேலும் பார்க்க

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!

இதுவரை பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1962-ம் ஆண்டு அமலுக்கு வந்தது ஆகும். வருகிற 1-ம் தேதி முதல், புது வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய வருமான வரிச் சட்டத்தின் கொள்கைகள் மூன்று... மேலும் பார்க்க