செய்திகள் :

நட்பு சண்டை என்ற பெயரில் திமுகவுக்கு `செக்’ - புதுச்சேரியில் கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?

post image

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது இந்தியா கூட்டணி. அதையடுத்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான வி.சி.க ஒரு தொகுதியிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.

வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தி.மு.க தனித்தனியே தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதில் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மங்கலம், திருபுவனை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் `ஏ’ மற்றும் `பி’ படிவங்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

புதுச்சேரி திமுக - காங்கிரஸ்

அதேபோல வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து தி.மு.க முறையிட்டதும், தங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் வாங்குமாறு கூறியது காங்கிரஸ். ஆனால் அந்த ஆறு தொகுதிகளிலும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் போட்டி வேட்பாளர்கள் `மூவ்’, தி.மு.க-வையும் வி.சி.க-வையும் உஷ்ணமேற்றியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, `புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறையில் எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அங்கு கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ், தி.மு.க போட்டியிடும் 5 தொகுதிகளில் வாபஸ் பெறுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஃபிரண்ட்லி ஃபைட் என்ற பெயரில் நீங்களும் நில்லுங்கள், நாங்களும் நிற்கிறோம். யார் வெற்றிபெறுகிறார்களோ பிறகு ஆட்சி அமைக்கும்போது ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்ற வாதங்களையும் அவர்கள் முன்வைப்பதாக கேள்விப்படுகிறோம்’ என்று கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

மேலும் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியையும் சேர்த்து மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருக்கிறது வி.சி.க. காங்கிரஸ் தலைமை தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறுமாறு கூறி வருகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

மங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ரகுபதி, ``என்னுடைய வேட்பு மனுவை நான் வாபஸ் பெற மாட்டேன். பீகாரில் சில தொகுதிகளில் எப்படி நட்பு ரீதியில் போட்டியிட்டார்களோ, அதேபோல புதுச்சேரியிலும் நாங்கள் போட்டியிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு நாளை 26.03.2026 அன்று கடைசி தினம் என்பதால், புதுச்சேரி காங்கிரஸ் தரப்பில் `பேச்சுவார்த்தை’ நடத்தி வருகிறது தி.மு.க. அதேபோல, ``காங்கிரஸ் தரப்பில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் எம்.எல்.ஏ வைத்தியநாதன்.

சைதாப்பேட்டை முதல் காரைக்குடி வரை; அமமுக போட்டியிடும் உத்தேச தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த 11 தொகுதிகள், அங்கு போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளிய... மேலும் பார்க்க

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (அன்புமணி அணி) 18 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பா.ம.க போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்... மேலும் பார்க்க

“த.வெ.க-வுடன் தனி அணி; `போட்டி' காங்கிரஸுக்கு 20 சீட்!” - காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்!

தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரஸ் கட்சியில் சத்தமில்லாமல் ஒரு டீம் வெளியேற தயாராகி... மேலும் பார்க்க

கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தஞ்சாவூர் மாவட... மேலும் பார்க்க

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந... மேலும் பார்க்க

`ராஜபாளையம் டு சிவகாசி' - ராஜேந்திர பாலாஜி மீண்டும் பழைய தொகுதிக்கே மாறிய பின்னணி!

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக ராஜேந்திர பாலா... மேலும் பார்க்க