செய்திகள் :

'மன்னிப்பு கேட்கிறேன்'- டெல்லி அணியில் இருந்து விலகிய பென் டக்கெட்; ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடையா?

post image

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

விரைவில் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் களமிறங்கி இருக்கின்றனர்.

பென் டக்கெட்
பென் டக்கெட்

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் பென் டக்கெட் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து வீரரான பென் டக்கெட்டை டெல்லி அணி ரூபாய் 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

விலகல் தொடர்பாக பேசியிருக்கும் பென் டக்கெட், "ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது நான் எடுத்த கடினமான முடிவுதான். நிறைய யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டிற்காக எனது முழு பங்களிப்பையும் வழங்க நான் விரும்புகிறேன்.

அதைச் செய்ய வேண்டுமானால், வரவிருக்கும் கோடைகாலப் போட்டிகளுக்கு முன்னதாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த முடிவிற்காக டெல்லி அணியினரிடமும், ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் ஏற்படக்கூடிய இடையூறுக்கும் நான் வருந்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

பென் டக்கெட்
பென் டக்கெட்

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதிமுறை. அதன்படி, பென் டக்கெட் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது. வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ரா... மேலும் பார்க்க

RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட... மேலும் பார்க்க

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீரின் முரட்டுதனம் அவசியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' - சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! மேலும் பார்க்க

'தடை விதிக்கப்படும்!'- பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் ஆடும் வீரர்களுக்கு PCB எச்சரிகை

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட்... மேலும் பார்க்க

Kohli: "நாங்க அதிர்ஷ்டத்தால கோப்பையை வெல்லல, ஆனா பலர்.!" - ஆர்சிபி வெற்றி குறித்து கோலி

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றி குறித்து ஆர்சிபி நிர்வாகம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்... மேலும் பார்க்க