'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர்...
"மாற்று எரிபொருள் வாகனங்களை வழங்குவதே எங்கள் அணுகுமுறை" - Blue Energy Motors-ன் முன்னெடுப்பு
எந்தப் பக்கம் திரும்பினாலும் 'மாற்று எரிபொருளுக்கான தேவை' குறித்துதான் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் இந்தத் திசையில் தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் Blue Energy Motors-ன் தலைமை மார்க்கெட்டிங் ஆபீஸர் ஜெயேஷ் ஷேலார் உடன், இது குறித்து உரையாடினோம்.
``இந்தியாவின் தளவாட (logistics) துறை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப, சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் எரிபொருளும் மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை உணர்ந்ததிலிருந்துதான் எங்கள் நிறுவனத்தின் கனவு தொடங்கியது. 2020-ல் நிறுவனத்தைத் தொடங்கியபோது, இந்தியாவின் சரக்குப் போக்குவரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஏற்ற கனரக வாகனங்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம்.

நாட்டின் பெரும்பாலான சரக்குகளைச் சாலை வழியே கொண்டு செல்கிறோம். தொழில்கள், சப்ளை சங்கிலிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் இயங்குவதற்கும் கனரகச் சரக்கு வாகனங்களே முதுகெலும்பு. செயல்திறன், நம்பகத்தன்மை, சுத்தமான எரிசக்தி, இந்த மூன்றையும் fleet operators-க்கு நடைமுறையில் பயனுள்ளதாக ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம்.
எந்த வாகனமும் இந்தத் துறையில் வெற்றிபெற வேண்டும் என்றால் சுமைத் திறன், தூர வரம்பு (range), இயக்கச் செலவு. இந்த அடிப்படைகளில் சமரசம் இருக்கக் கூடாது. அதனால்தான் நாங்கள் மாற்று எரிபொருள் கனரக வாகனங்களை வலுவான பொறியியல் தேர்ச்சியோடும் உலகத் தரமான தொழில்நுட்பக் கூட்டாண்மையோடும் உருவாக்கி வருகிறோம்.
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து முறை மேலும் திறனுள்ளதாகவும் எதிர்காலத்துக்குத் தயாராகவும் மாறும் என்பதில் நாங்கள் பங்காற்ற விரும்புகிறோம்.
சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்தும் கனரக வாகனத் துறையில் மற்ற நிறுவனங்களிலிருந்து Blue Energy Motors எப்படி வேறுபடுகிறது?
இன்றைய நிலையில், இந்தியாவின் மாற்று எரிபொருள் கனரக வாகனப் பிரிவில் அளவின் அடிப்படையில் அதிகம் விற்கும் நிறுவனம் Blue Energy Motors-தான். இந்திய நீண்ட தூரப் போக்குவரத்தின் தேவைகளை மனதில் கொண்டே எங்கள் தீர்வுகளை வடிவமைத்திருக்கிறோம். இதுவரை 1,300-க்கும் அதிகமான LNG மற்றும் மின்சாரக் கனரக வாகனங்களை நாடு முழுவதும் இயக்கத்தில் இறக்கியிருக்கிறோம். எங்களை வேறுபடுத்துவது என்னவென்றால், இன்றே பரவலாகப் பயன்படுத்த முடிகிற தீர்வுகளில் கவனம் செலுத்துகிறோம். Diesel-க்கு இணையான இயக்கச் செலவில் மாற்று எரிபொருள் வாகனங்களை வழங்குவதே எங்கள் அணுகுமுறை. இதனால் fleet operators-க்கு சுமைத் திறன், range அல்லது இயக்குத் திறனில் எந்தச் சமரசமும் இல்லாமல் சுத்தமான வாகனங்களுக்கு மாற முடிகிறது. எங்கள் வாகனங்கள் இதுவரை மொத்தம் 9 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓடியிருக்கின்றன. இதன் மூலம் 25,000 டன்னுக்கும் அதிகமான CO₂ வெளியீட்டைக் குறைத்திருக்கிறோம். இந்த நடைமுறைச் சாதனைகள்தான் எங்களை மாற்று எரிபொருள் கனரக வாகனத் துறையில் இந்தியாவின் முதலிடத்தில் தொடர்ந்து நிறுத்தி வைக்கின்றன.

அடுத்த பத்தாண்டுகளில் சுத்தமான எரிபொருள் வாகனங்களுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துப் பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போகும் என்பதால், வாய்ப்பு மிகவும் பெரியது. SIAM தரவுகளின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான கனரகச் சரக்கு வாகனங்கள் விற்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு, உற்பத்தி, நுகர்வு எல்லாம் விரிவடையும்போது இந்தத் தேவையும் தொடர்ந்து வளரும். சாலை வழியே 60 சதவிகிதத்துக்கும் அதிகமான சரக்கு இந்தியாவில் கொண்டு செல்லப்படுகிறது என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கூறுகிறது. சப்ளை சங்கிலிகள் விரிவடையும்போது புதிய வாகனத் தேவை fleet விரிவாக்கம் மற்றும் பழைய வாகன மாற்றீடு என இரு வழிகளிலும் உருவாகும். NITI Aayog ஆராய்ச்சியின்படி 2050-ல் இந்தியாவின் சாலைச் சரக்குத் தேவை இன்றைய அளவை விட நான்கு மடங்காக வளரும். இது LNG மற்றும் மின்சாரக் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்துக் கலவையில் (transport mix) இடம்பெறச் சிறந்த சூழலை உருவாக்குகிறது.
இந்தியாவின் தளவாட (logistics) துறை மாற்று எரிபொருளுக்குப் பரந்த அளவில் மாறத் தயாராக இருக்கிறதா?
இந்தியாவின் தளவாட துறை படிப்படியாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் கட்டம் கட்டமாகத்தான் நடக்கும். வாகனங்கள், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு (ecosystem) எல்லாமே ஒரே நேரத்தில் வளரும்போதுதான் இது சாத்தியமாகும்.

சுத்தமான சரக்கு வாகனச் சந்தையை போட்டி எப்படி உருவாக்கும் என்று நினைக்கிறீர்கள்?
போட்டி என்பது இந்தச் சந்தையின் வளர்ச்சிக்கு ஒரு வலிமையான இயந்திரமாக இருக்கும். புதிய நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழையும்போது, வாகனத் தொழில்நுட்பம், எரிசக்தித் தீர்வுகள், உதவி உள்கட்டமைப்பு என அனைத்திலும் முதலீடு அதிகரிக்கும். இது ஒட்டுமொத்தச் சந்தை வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.



















