செய்திகள் :

RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

post image

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது.

இதில் ராஜஸ்தான் அணியை அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வால்மார்ட், ஃபோர்டு போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆன கல் சோமானி 13,500 கோடிக்கு வாங்கினார்.

ராஜஸ்தான் அணியை வாங்கிய கல் சோமானி
ராஜஸ்தான் அணியை வாங்கிய கல் சோமானி

ராஜஸ்தான் அணியை தொடர்ந்து தற்போது ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் BXPE ஆகிய நிறுவனங்கள் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கி இருக்கின்றன.

இதற்கு முன்பு பெங்களூரு அணியை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்களான, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பங்கு முதலீட்டு நிறுவனமான EQT, மற்றும் மணிப்பால் ஹாஸ்பிடல் நிறுவனம் ஆகியவை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆதித்யா பிர்லா குழுமம்
ஆதித்யா பிர்லா குழுமம்

இந்நிலையில் தற்போது 16,700 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் BXPE ஆகிய நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்கியிருக்கின்றன.

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந... மேலும் பார்க்க

`ராஜபாளையம் டு சிவகாசி' - ராஜேந்திர பாலாஜி மீண்டும் பழைய தொகுதிக்கே மாறிய பின்னணி!

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக ராஜேந்திர பாலா... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடியில் கே.பழனிசாமி; மைலத்தில் சி.வி.சண்முகம் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியி... மேலும் பார்க்க

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவ... மேலும் பார்க்க