செய்திகள் :

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

post image

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ராமதாஸ், சசிகலா

கடந்த மாதம் பசும்பொன்னில் நடந்த கூட்டத்தில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட சசிகலா, ஏற்கெனவே தொடங்கப்பட்ட அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று, தற்போது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளார்.

தற்போது விருப்ப மனு விநியோகம் செய்துவரும் நிலையில், பெரிய அளவில் ஆதரவாளர்கள் வராவிட்டாலும், ஓரளவு விருப்ப மனு அளித்துள்ளனர். மனு அளித்தவர்களில் ஒரு சிலரை சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே தெரியும் என்பதால், அவர்களிடம் நேர்காணல் நடத்தாமலே அவர்களை முதற்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சசிகலாவுடன் ஜீவிதா நாச்சியார்

அந்த வகையில், சசிகலா அறிவிக்கவிருக்கும் வேட்பாளர்கள் இவர்கள்தான் என்கிறார்கள்!

1. திருத்தணி -நரசிம்மன் (முன்னாள் எம்.எல்.ஏ)

2. திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார் (அமமுக-வில் பயணித்த வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார், அங்கு தனக்கு சீட் கிடைக்காது என்பது தெரிந்ததால், சமீபத்தில் சசிகலா அணிக்கு வந்தார். ஆர்.பி.உதயகுமார் இரண்டு முறை வெற்றிபெற்ற திருமங்கலத்தில் ஜீவிதா நாச்சியாரை நிறுத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம்)

வெள்ளத்துரை

3. நாங்குனேரி அல்லது அம்பாசமுத்திரம் - வெள்ளத்துரை.

காவல்துறை அதிகாரியாக பொறுப்பில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற பின்பும் சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறியுள்ள வெள்ளத்துரைதான் தற்போது அரசியல் ஆலோசகர்போல செயல்பட்டு வருகிறார். இவர் நாங்குனேரியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தாலும், இசக்கி சுப்பையாவுக்கு குடைச்சலை கொடுக்க வெள்ளத்துரையை அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

4. ஆண்டிப்பட்டி - கர்ணன்

5. முதுகுளத்தூர் - பசும்பொன் ராமகிருஷ்ணன்

6. மேலூர் - சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

7. சிவகங்கை - வழக்கறிஞர் முருகானந்தம்

8. மதுரை மேற்கு - சக்கரவர்த்தி (அஇபுதமமுக-த்தின் நிறுவனரான இவரை செல்லூர் ராஜூவுக்கு எதிராக நிறுத்த உள்ளார்)

9. உசிலம்பட்டி - ஒச்சாத்தேவர் (முன்னாள் போலீஸ்காரர்)

என்று முதல் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் சசிகலா, அடுத்து அ.தி.மு.க, அ.ம.மு.க-வில் சீட் கிடைக்காமல் அதிருப்தியாகி தன்னைத் தேடி வருகின்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்து வருகிறாராம்.

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவ... மேலும் பார்க்க

'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை?

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில் இறங்கியுள்ளது தி.மு.க.கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்க... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப் போறீங்களா? - இனி 'இவ்வளவு' காசு பிடிக்கப் போறாங்க!

டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரூபாய் ரீஃபண்ட் செய்யப்படும் என்பதில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை.அவை என்னென்ன? ரயில் கிளம்புவதற்கு... 72 மணிநேரத்திற்கு முன்பு, எப்போது கேன... மேலும் பார்க்க

'என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!'-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

அ.தி.மு.க-வில்எம்.ஜி.ஆர்காலத்தில்அமைச்சராகவும்,காங்கிரஸ்கட்சியில்முன்னாள்மாநிலதலைவராகவும்இருந்தவர்திருநாவுக்கரசர்.திருச்சிநாடாளுமன்றத்தொகுதிஎம்.பி-யாகஇருந்தஇவருக்குகடந்தநாடாளுமன்றதேர்தலில்சீட்மறுக்கப்... மேலும் பார்க்க

'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது' மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம் வசம் உள்ளது. அதற்கு முன்பும் பலமுறை சி.பி.எம் வென்றுள்ளது. இந்த தேர்தலில் சி.பி.எம் ... மேலும் பார்க்க