செய்திகள் :

இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே - இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!

post image

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் பெயரில் 'பான்' கார்டு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா?

இதுவரை நீங்கள் 'பான்' கார்டு எடுக்கவில்லை எனில், உடனடியாக இந்த மாதத்துக்குள் எடுத்துவிடுங்கள்... அப்படி எடுக்காவிட்டால், நீங்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்!

காரணம், 'பான்' கார்டு எடுப்பது தொடர்பாக சில விதிமுறைகளை வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி மாறுதலுக்கு உள்ளாகப் போகிறது. என்ன மாற்றம் வரப் போகிறது?

ஆதார் அட்டை - பான் கார்டு

இதுநாள் வரை நீங்கள் 'பான்' கார்டு எடுக்க வேண்டும் எனில், ஆதார் கார்டு ஒன்றைத் தந்தால் போதும். அதில் உள்ள பிறந்த தேதியை இறுதித் தகவலாக எடுத்துக்கொள்ளப்பட்டு, 'பான்' கார்டிலும் அதே தேதியே பிறந்த தேதியாக குறிப்பிடப்படும்.

ஆனால், ஆதாரில் குறிப்பிட்டப்பட்டுள்ள பிறந்த தேதியை ஒருவரின் பிறந்த தேதியாக ஏற்றுக்கொள்வதில் சிலபல சிக்கல்கள் உருவாகி இருப்பதால், இனி 'பான்' கார்டு விண்ணப்பிக்கும்போது ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி இறுதி ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிற நிலை பிறந்திருக்கிறது.

வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஒருவர் 'பான்' கார்டு வேண்டும் என்று விண்ணப்பம் செய்தால், பிறந்த தேதிக்கு சான்றாக ஆதார் கார்டினை மட்டும் தராமல், பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆவணத்தைத் தரவேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது.

Aadhar

இந்தப் புதிய ஆவணம் எவையாக இருக்கலாம் எவையெவை?

1. பிறப்புச் சான்றிதழ்

2. வாக்காளர் அடையாள அட்டை

3. பள்ளிச் சான்றிதழ்

4. வாகன ஓட்டுநர் உரிமம்

5. பாஸ்போர்ட்

இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தைத் தரவேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது.

QR கோடு உள்ள புதிய பான் கார்டு!

வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆதாருடன் கூடுதலாக மேற்சொன்ன ஆவணங்களில் ஏதாவது ஒன்றைத் தந்தால் மட்டுமே 'பான்' கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.

தவிர, ஆதார் கார்டில் உள்ளபடிதான் தரப்படும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆக, உங்கள் வீட்டில் யாருக்காவது 'பான்' கார்டு எடுக்க நினைத்திருந்தால், இந்த மாதத்துக்குள் எடுத்துவிடுவது மிகவும் நல்லது. அல்லது கூடுதல் ஆவணங்களைத் தர நிறைய அலைய வேண்டியிருக்கும்!

லாபம்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களை படித்து பார்ப்பது அவசியம்.

இனி 10 இல்லை; 4 மட்டுமே.! மியூச்சுவல் ஃபண்டில் நாமினி பற்றி செபி கொண்டுவரும் அதிரடி மாற்றம்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பங்குச் சந்தை கட்டுபாட்டு வாரியமான செபி மீண்டும் அதிரடியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினி (வாரிசுதாரர்) தொடர்... மேலும் பார்க்க

ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை 'லட்சங்களாக' மாற்றுவது எப்படி?

மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க... பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய ... மேலும் பார்க்க

TAX : நீங்கள் வரி சேமிக்கிறீர்களா அல்லது பணத்தை இழக்கிறீர்களா? | சிறப்பு நிகழ்ச்சி, மார்ச் 15

கவனியுங்கள்... மார்ச் மாதம் வந்துவிட்டாலே பலருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அலுவலகத்திலிருந்து, "Investment Proof-ஐ சப்மிட் செய்யுங்கள், இல்லையென்றால் சம்பளத்தில் அதிக TDS பிடிக்கப்படும்" என... மேலும் பார்க்க

ஊர் திரும்பும் ஐடியா இருக்கா? NRI-களுக்கான சிறந்த Lumpsum முதலீடு & மாத வருமானத் திட்டம்!

குடும்பத்தை விட்டு பல ஆயிரம் மைல்கள் தள்ளி, வெளிநாட்டில் இரவு பகலாக உழைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை அங்கே சரியாகத்தான் நிர்வகிக்கிறீர்களா?கீழே உள்ள இந்த 'NRI செக்லிஸ்ட்ட... மேலும் பார்க்க

மின் கட்டணத்துக்கு முடிவு... ரூ.25,000 முன்பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்... எப்படி?

வேலை இன்மை, வருமானம் குறைவு போன்ற சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் மக்களின் ஒவ்வொரு ரூபாயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருமானம் இல்லாவிட்டாலும் சில செலவுகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. அவற்றில... மேலும் பார்க்க