செய்திகள் :

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

post image

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு நடந்த இன்றைய நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் தேமுதிக மற்றும் மநீமவின் செல்வாக்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

அறிவாலயத்தில் நேற்றிலிருந்து தமிழக தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. இன்று கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்திருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கான நேர்காணலில் கலந்துகொண்டார்.

கறார் காட்டிய முதல்வர்

கடந்த முறை கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியிருந்தது. அதனால் நேர்காணலில், இந்த முறை உள்ளடி வேலைகள் எதுவுமின்றி நிர்வாகிகள் ஒன்றிணைந்து யாரை வேட்பாளராக அறிவிக்கிறோமோ அவருக்காக வேலை செய்ய வேண்டுமென முதல்வர் கறாராக கூறியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கென உள்ளே வரும் விண்ணப்பத்தாரர்களிடம் தொகுதி நிலவரம் குறித்தும் முதல்வர் கேட்டு தெரிந்துகொள்கிறார்.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் தொகுதிகளுக்காக நேர்காணலுக்கு சென்றவர்களிடம், 'தொகுதியில் தேமுதிக, மநீமவுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும்?' என குறிப்பாக கேட்டிருக்கிறார்.

இரண்டு கட்சிக்கும் தலா 2000-3000 வாக்குகள் வரை இருக்குமென உடன்பிறப்புகள் தெரியப்படுத்தியிருக்கின்றன. அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தவெக கொஞ்சம் வலுவாக இருப்பதாகவும், விஜய் பிரிக்கப் போகும் வாக்குகளும் நமக்கு சாதகமாகவே அமையும் என்றும் சில நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். அதையும் முதல்வர் உன்னிப்பாக கேட்டிருக்கிறார்.

அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை சேர்ந்தவர்களிடம், 'இந்த முறையும் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கலாமா உங்க கருத்து என்ன?' என முதல்வர் கேட்டிருக்கிறார். உடன்பிறப்புகள் அத்தனை பேரும் ஒருமித்த குரலில் 'வேண்டவே...வேண்டாம்' எனக் கூறியிருக்கின்றனர். 'கூட்டணி கட்சிகளிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பேசிவிட்டு சொல்கிறோம்!' என முதல்வர் கூறியிருக்கிறார்.

பிரேமலதா
எல்.கே.சுதீஷ், பிரேமலதா, ஸ்டாலின்

காலை 9:30 - 10:00 மணிக்குள் அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் வந்து சேரும் முதல்வர் 2:15 வரைக்கும் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு சித்தரஞ்சன் சாலை வீட்டிற்கு சென்று மதிய உணவை முடித்துவிட்டு சிறிய ஓய்வோடு மீண்டும் 4:30 மணிக்கு அறிவாலயம் வந்து 7 மணி வரைக்கும் மீண்டும் நேர்காணல் நடத்துகிறார்.

`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்து... மேலும் பார்க்க

`பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்!

“நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று இஃப்தார் நிகழ்ச்... மேலும் பார்க்க

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' - அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விருப்ப மனு கொடுத்து ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; 'ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?'- அண்ணாமலை

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந... மேலும் பார்க்க

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம... மேலும் பார்க்க