'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார்...
தங்க நகை வாங்க, வங்கியில் இருந்து பணத்தை எடுக்க.! பான் கார்டு விதிமுறை மாறுகிறதா? | Gold | PAN
வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை அனைவரும் அவசியம் தெரிந்துவைத்திருப்பது நல்லது. இல்லாவிட்டால், கடைசி நேரத்தில் நாம் பதற்றத்திற்கு உள்ளாக வேண்டி இருக்கும்.
வருகிற 1-ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பான விதிமுறைகள் எப்படி மாறப் போகின்றன?

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது.!
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், பான் கார்டு தரவேண்டும் என்பது தற்போதுள்ள நடைமுறை ஆகும். ஆனால், வருகிற 1-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையின்படி, வங்கியில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போதுதான் பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். அதற்குக் கீழே இருக்கும் தொகை அளவுக்கு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் பான் கார்டு எண் தரத் தேவை இல்லை என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும்போது...
வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும்போது பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், பான் கார்டு எண் தரவேண்டும்.

நிலம், மனை வாங்கும்போது...
நிலம் அல்லது மனை வாங்கும்போது, அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்குமேல் இருந்தால், பான் கார்டு எண் தரவேண்டும் என்பது இப்போது வரை உள்ள விதிமுறை ஆகும். ஆனால், புதிய விதிமுறையின்படி,ரூ.20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள நிலம் மற்றும் மனைப் பரிவர்த்தனைக்கு பான் கார்டு எண் தர வேண்டியது அவசியம் ஆகும்.
ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும்போது...
ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும்போது ரூ.50 ஆயிரத்துக்குமேல் கட்டணம் கட்டும்போது பான் கார்டு எண் தரவேண்டியது அவசியம் என்கிற விதிமுறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இனி ரூ.1 லட்சத்துக்குமேல் கட்டணம் கட்டவேண்டி இருந்தால் மட்டுமே பான் கார்டு எண் தரவேண்டும் என புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

மோட்டார் வாகனம் வாங்கும்போது....
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் வாங்கும்போது பான் கார்டு எண்ணைத் தருவது அவசியம் என்பது இன்றுள்ள விதிமுறை ஆகும். ஆனால், வருகிற 1-ஆம் தேதி முதல் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு மட்டும் (இரு சக்கர வாகனம் உள்பட) பான் கார்டு எண் தந்தால் போதும்.
இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது...
இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பிரிமீயம் கட்டினால் மட்டுமே பான் கார்டு எண் தர வேண்டும் என்று இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, அனைத்து இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே பான் கார்டு எண் தரவேண்டும்.

தங்க நகை வாங்கும்போது...
தங்க நகை வாங்கும்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்கினால், பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய விதிமுறையைப் போலவே, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு மேல் ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்கினால், பான் கார்டு எண் தரவேண்டியது அவசியம் ஆகும்!
இந்த விதிமுறை நன்கு தெரிந்துவைத்துக் கொண்டால், எந்த விதமான குழப்பமும் இல்லாமல், பதற்றம் அடையாமல் இருக்கலாம்!

இதுபோன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.





















