செய்திகள் :

TVK: '5 பாயின்ட்டுகள்... 47 கி.மீ., பயணம்!' - சென்னையில் விஜய்யின் பிரசார திட்டம் என்ன?

post image

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் முதல் சென்னையிலிருந்து பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். விஜய்யின் பிரசார திட்டம் என்ன?

TVK Vijay
TVK Vijay

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருந்தார். 234 வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் விஜய் போட்டியிடுவதாக திட்டமிடப்பட்டிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார்.

இதற்காக தவெகவின் நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோட்டையன் விஜய்யின் பிரசார திட்டத்தோடு நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்திருந்தார். நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்படும் விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூரின் MKB நகரின் பஸ் டெப்போ அருகே முதல் பாய்ன்ட்டில் பேசுகிறார்.

TVK Vijay
TVK Vijay

அதைத் தொடர்ந்து கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும் அண்ணாநகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 பாய்ன்ட்டுகளில் விஜய் பேசவிருக்கிறார். தவெக சார்பில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் 47 கி.மீ தூரத்துக்கு பயணித்து விஜய் பேசவிருக்கிறார். ஒவ்வோர் இடத்திலும் 3000 முதல் 5000 பேர் வரைக்கும் கூடுவார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பெரம்பூரில் விஜய், கொளத்தூரில் வி.எஸ்.பாபு, வில்லிவாக்கத்தில் ஆதவ், அண்ணாநகரில் ராம் குமார், விருகம்பாக்கத்தில் சபரி ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடவிருக்கின்றனர்.

"நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்.!"- திமுக-வின் தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக அர்ஜுனராஜ்

திமுக தங்களுக்கு கொடுத்த எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக தங்களுக்கு வருத்தம் உள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தெரிவித்திருக்கிறார்.திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க

முட்டி மோதும் நிர்வாகிகள்; நண்பரைக் களமிறக்கும் விஜய் டு சீமானுக்கு ஜோதிடரின் அறிவுரை! | கழுகார்

அறுபடை வீட்டில் ஆரம்பித்த சீமான்!ஜோதிடரின் அறிவுரை...தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிவிட்டுதான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் நா... மேலும் பார்க்க

நாமக்கல்: `பட்டியல் மற்றும் பிற சமூக குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்கள்!'- அண்ணாமலை கண்டனம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்குத் தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குத் தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் ... மேலும் பார்க்க

இரு முறை அமைச்சர்; ஒரு முறை தோல்வி - ஜோலார்பேட்டையில் மீண்டும் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் வலம் வரும் கே... மேலும் பார்க்க

தவெக: 234 வேட்பாளர்களையும் இறுதி செய்த விஜய்; நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று இறுதி செய்யவிருக்கிறார். இதைத் தொடர்ந்து தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நாளை நடத்தவிருக்கின்றனர்.TVK Vijay | விஜ... மேலும் பார்க்க

அப்செட், கடுப்பு, அதிர்ஷ்டம்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு லாபம்? நஷ்டம் யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைத்த விஷயத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என நேற்று பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி விவகாரத்தைய... மேலும் பார்க்க