செய்திகள் :

`டிரெஸிங் ரூமில் நிறவெறி; அழவைத்த சக வீரர்கள்' - கசப்பான அனுபவம் பகிர்ந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணன்

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

'Indian Express' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், "என்னுடைய வீட்டில் கிரிக்கெட் தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை. எனது விளையாட்டு கால நினைவுகளில் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அளவிற்கான அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

லஷ்மன் சிவராமகிருஷ்ணன்
லஷ்மன் சிவராமகிருஷ்ணன்

ஒரு முறை மூத்த பேட்ஸ்மேன் ஒருவர் என்னை அழைத்து அவருடைய காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார். நான் அவரை நிமிர்ந்து பார்த்து 'அது என் வேலையல்ல, நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களே செய்துகொள்ளுங்கள்' என்று கூறினேன்.

அந்த கிரிக்கெட் வீரர், என்னை மைதான ஊழியர் என்று தவறாக நினைத்துக்கொண்டார். இனவாதம் அல்லது நிற பாகுபாடு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. இந்த மனிதர் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இது போன்ற நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

1982-83 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியில் எனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு வந்த சக இந்திய வீரர் ஒருவர், `சரியான நிறத்தில் கேக் ஆர்டர் செய்துள்ளீர்கள். கருப்பு நிற பையனுக்கு ஏற்ற டார்க் சாக்லேட் கேக்' என்று நிறத்தை வைத்து கேலி செய்தார்.

நான் கேக் வெட்ட மறுத்து அனைவர் முன்பும் கண்ணீர்விட்டு அழுதேன். பின்னர் சுனில் கவாஸ்கர் வந்து என்னை சமாதானப்படுத்தி கேக் வெட்ட வைத்தார்.

லஷ்மன் சிவராமகிருஷ்ணன்
லஷ்மன் சிவராமகிருஷ்ணன்

அதேபோல ஒருமுறை பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக மும்பையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான் பங்கேற்றிருந்த போது பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது எனது தோற்றத்தைப் பார்த்த காவலாளி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தார்.

சுமார் 1 மணி நேரம் கழித்து சக வீரர் ஒருவர் வந்த பிறகே என்னை உள்ளே அனுமதித்தார். ஓர் இந்திய வீரராக நான் இருந்தபோது இத்தகைய புறக்கணிப்புகளை நான் சந்தித்திருக்கிறேன்" என தனது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

Dhoni: "எனக்கு இளம் வயது தோனியைத் தான் பிடிக்கும்; ஏன்னா.!"- சவுரவ் கங்குலி புகழாரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.'Sports Now' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, " தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (20... மேலும் பார்க்க

'மன்னிப்பு கேட்கிறேன்'- டெல்லி அணியில் இருந்து விலகிய பென் டக்கெட்; ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடையா?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. விரைவில் போட்டிகள் தொடங்க இருக்கும... மேலும் பார்க்க

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது. வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ரா... மேலும் பார்க்க

RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட... மேலும் பார்க்க

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீரின் முரட்டுதனம் அவசியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' - சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! மேலும் பார்க்க