செய்திகள் :

"ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை" - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

post image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தீயாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனமும், ஆளும் கட்சியின் பதிலும் எனச் சூடுபறக்கும் தமிழ்நாட்டு அரசியலில, திமுக கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தப்படுவதாகவும் அலைகழிக்கப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு இருக்கும் அரசியல் சிக்கல்களை மறைப்பதற்காகத் தொடர்ந்து தி.மு.க கூட்டணியைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்து வருகிறார்.

ஒரு காலத்தில் வட இந்தியத் தலைவர்கள் அ.தி.மு.க தலைவரைப் பார்ப்பதற்காக அவர் வீட்டு வாசலில் வந்து நின்ற நிலை இருந்தது. ஆனால், இன்று ஒரு சிறிய முடிவை எடுப்பதற்குக்கூட டெல்லிக்குப் பறந்து செல்லும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

இதை மறைக்கத் தொடர்ந்து திமுக கூட்டணியை விமர்சிக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரது கூட்டணியில் உள்ள அ.ம.மு.க, பா.ம.க தலைவர்களும் டெல்லி சென்று வந்த பிறகே தங்கள் பிரச்னைகள் தீர்ந்ததாகக் கூறினார்கள். இப்படி அமித்ஷாவின் முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளை 'அடிமை' என்று பேசுவது தேவையற்ற செயல்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தேர்தல் களத்தில் படிப்படியாகத் தனது கட்சியின் வலிமையை நிரூபித்து வளர்ந்தவர். இன்று தி.மு.க தலைமையால் அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இந்த நல்லுறவை எடப்பாடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-விற்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி போன்ற பல கட்சிகள் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. தமிழகத்தில் நோட்டாவிற்குக் கீழே இருந்த பா.ஜ.க-விற்கு எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்.

பீகாரில் நிதீஷ் குமாருக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் சரத் பவார் கட்சிகளுக்கும் என்ன கதி ஏற்பட்டதோ, அதே நிலைதான் அ.தி.மு.க-விற்கும் ஏற்படப் போகிறது. மெல்ல மெல்ல அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்பதை அவர் உணர வேண்டும்.

வேல்முருகன்
வேல்முருகன்

"மோடியா? லேடியா?" என்று கேட்டு, தேசியக் கட்சியான பா.ஜ.க-விற்கே சவால் விட்டவர் ஜெயலலிதா. ஆனால், இன்று மோடியே எல்லாம் என்று கூறி ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலையை எடப்பாடி பழனிசாமி செய்கிறார். டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டே, மீண்டும் மீண்டும் அமித்ஷாவிடம் அடிபணிந்து கிடக்கிறார்.

ஒவ்வொரு கூட்டணிக் கட்சியுடனும் உரிய மரியாதையுடன் முதல்வர் பேசி வருகிறார். இரண்டு, மூன்று முறை பேச வேண்டியிருந்தாலும் அவர்கள் மனம் ஏற்கும் வரை பொறுமையாகப் பேசி ஒருமனதாக தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கிறார். இது மனமொத்த கூட்டணி. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்பது அமித்ஷாவின் கட்டளைக்கும் அவரது அசைவுக்கும் ஏற்ப அமைக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத தே.மு.தி.க-விற்குக் கூடுதல் இடங்கள் கொடுத்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதற்கு மிகத் தெளிவாக திருமாவளவன் பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கொடுத்ததாக நீங்கள் கூறினால், அது தவறு. அது பாரம்பர்யம் மிக்க, தமிழகத்தை ஆண்ட கட்சி. அதேபோல தே.மு.தி.க-வும் தமிழகத்திலே எதிர்க்கட்சியாக இருந்த கட்சி; எனவே அதற்கான அங்கீகாரத்தோடு அந்த இடங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வேல்முருகன் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறவர். அவர் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். அவர் திமுக தலைவரைப் பார்க்க முடியவில்லை என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இன்று அவதூரை வாரி இறைப்பது தவறான செயல்பாடு" என்று கடிந்துகொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் Vs விஜய்... பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10

பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம்‘வாவ்’ வியூகம் 10வாக்காளர்கள் எதிர்பார்த்த ஜனநாயகத் திருவிழா தேதி அறிவிக்கப்படாகிவிட்டது. ஏப்.23-ல் தமிழகம் தேர்தலை சந்தித்துவிடும். தேர்தலும் பெண் வாக்காளர்களின் ப... மேலும் பார்க்க

அமைச்சர் சக்கரபாணியின் அண்டர் கிரவுண்ட் டீலிங்; தொகுதியை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கு மெகா பிளான்!

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர் சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கண்டோரேலில... மேலும் பார்க்க

'அஜித் பவார் இறந்தவுடன் கட்சியை கைப்பற்ற முயன்ற மாஜி மத்திய அமைச்சர்' - சரத் பவார் பேரன் பகீர்

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் புதிய துணை முத... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``புதருக்குள்ளேயுமா போலிஸ் லைட் போடமுடியும்?"- எஸ்.வி சேகர் சர்ச்சை பதில்

திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டப் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். அப்போது, ... மேலும் பார்க்க

``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் ஏற்கனவே எண்ணெய் விலைகள் கடுமையாக உயர... மேலும் பார்க்க

பாபநாசம் தொகுதி அமமுக-வுக்கு இல்லை; ரூட் போடும் வைத்தி! - திமுகவில் இணைகிறாரா டிடிவி விசுவாசி?

அமமுக-வின் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி. டி.டி.வி.தினகரனுக்கு அடுத்தபடியாக டெல்டா அமமுக-வின் முகமாக இருந்தவர். சசிகலாவின் நெருங்கிய உறவினர். அதிமுக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகி... மேலும் பார்க்க