செய்திகள் :

Dhoni: "எனக்கு இளம் வயது தோனியைத் தான் பிடிக்கும்; ஏன்னா.!"- சவுரவ் கங்குலி புகழாரம்

post image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

'Sports Now' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, " தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக அவரது தலைமையிலான அணி வென்றிருக்கிறது.

தோனி
தோனி

அதனால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என சொல்வேன்.

ஜார்க்கண்ட் எனும் சிறிய மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வளர்ந்தவர் தோனி.

அவருக்கு முன்பு அந்த மாநிலத்தில் இருந்து வந்து இந்திய அணிக்காக விளையாடிவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை.

அந்த வகையில் அவர் பல இளம் வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

எனக்கு இளம் வயது தோனிதான் அதிகம் பிடிக்கும். அவரை போல சர்வ சாதரணமாக சிக்ஸர் விளாசியவர்களை நான் பார்த்தது இல்லை.

நீளமான முடியுடன், அஞ்சாமல் விளையாடுவார். நான் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் உருவெடுத்தது இல்லை.

அதனால்தான் தோனியை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்” என்று கங்குலி தோனியை புகழந்து பேசியிருக்கிறார்.

'மன்னிப்பு கேட்கிறேன்'- டெல்லி அணியில் இருந்து விலகிய பென் டக்கெட்; ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடையா?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. விரைவில் போட்டிகள் தொடங்க இருக்கும... மேலும் பார்க்க

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது. வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ரா... மேலும் பார்க்க

RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட... மேலும் பார்க்க

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீரின் முரட்டுதனம் அவசியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' - சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! மேலும் பார்க்க

'தடை விதிக்கப்படும்!'- பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் ஆடும் வீரர்களுக்கு PCB எச்சரிகை

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட்... மேலும் பார்க்க