ஸ்டாலின் Vs விஜய்... பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10
Kaattaan: "சின்ன வயசுலேயே சினிமா பைத்தியம்; பாதியிலேயே படிப்பு நிறுத்தப்பட்டு.!"- வடிவேல் முருகன்
'காக்கா முட்டை' மணிகண்டனின் அடுத்த படைப்பான 'காட்டான்' வெப் சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'கடைசி விவசாயி' படத்தை தொடர்ந்து மணிகண்டன் டைரக்ட் செய்திருக்கும் இதிலும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. படகுழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.
வடிவேல் முருகன் பேசுகையில், "சின்ன வயசுல இருந்தே சினிமா பைத்தியம் நான். எதுனால அப்படி ஆனேன்னு தெரியல. ஆனா, சின்ன வயசுல இருந்தே படம் பார்க்க பிடிக்கும். வீட்டுக்கு வர்றவங்க கொடுக்கிற பணத்தை வச்சு வீட்டுக்கு தெரியாமல் படத்துக்குப் போவேன்.
அப்படி நான் பார்த்த படங்களோட கதைகளை என் நண்பர்களுக்கு சொல்வேன். பிறகு பாதியிலேயே படிப்பு நிறுத்தப்பட்டு, சம்பாதிக்க தொடங்கிட்டேன். நான் சம்பாதிக்க தொடங்கின பிறகும் படங்கள் தொடர்ந்து பார்ப்பேன்.
நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, என்னை பாதித்த படங்களுக்கு, தியேட்டருக்கு பெருசா போகாதவங்களை அனுப்பி படம் பார்க்க வைப்பேன்.

பிறகு, நான் பில்டிங் காண்டிராக்டராக வளர்ந்த பிறகு ஒரு வாரத்துக்கு ஐந்து படங்களாவது பார்ப்பேன். அப்படியான சமயத்துல என்னுடைய தூக்கத்தை கலைத்த படம் 'காக்கா முட்டை'. என் அலுவலகத்துல வேலை பார்த்தவங்களுக்கு அரை நாள் லீவ் தந்து அந்தப் படத்தை பார்க்க வச்சேன்.
இன்னைக்கு அதே இயக்குநருடைய இயக்கத்துல நான் நடிச்சிருக்கேன். சிலரை மட்டும்தான் நம்ம குருவாக ஏத்துக்குவோம். அப்படி மணிகண்டன் சார்தான் என்னுடைய குரு.
விஜய் சேதுபதி அண்ணனுடைய குணம்தான் அவரை இந்த இடத்துக்கு கூட்டி வந்திருக்கு. அவர்கிட்ட 20 நிமிஷம் பேசினாலும் 10 வருஷத்துக்கான பாசிட்டிவிட்டி கிடைச்சிடும்." என்றார்.

















