செய்திகள் :

காயத்தால் ஆக்‌ஷனுக்கு தற்காலிக `நோ' - பள்ளிகால காதல் சப்ஜெக்ட்டுக்கு திரும்பும் ஷாருக்கான்!

post image

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்த கட்டமாக காதல் படத்திற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் பல அதிரடி படங்களில் நடித்த பிறகு, இப்போது உடலுக்கு அதிக சிரமம் தராத ஒரு ஒரு காதல் கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கான் விரும்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது கிங் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான், இப்படப்பிடிப்பின் போது காயம் அடைந்தார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரங்களில் இருந்து விலகி இருக்க ஷாருக்கான் முடிவு செய்து உள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் பாராகான் மீண்டும் படங்களை இயக்க வந்தால் ஷாருக்கானை வைத்து இயக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் பாரா கான் இதற்காக ஷாருக்கானை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்படம் முதிர்ச்சியான காதலை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. அது குறித்து ஜூன் மாதத்திற்குள் முடிவு எடுக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தவிர வேறு ஒரு இயக்குனரும் ஷாருக்கானிடம் காதல் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதில் பழைய பள்ளி, முதிர்ச்சியான காதல், அதிக பட்ஜெட் என கதை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். ஏற்கனவே டாக்டர்கள் வேறு அதிரடி படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறி இருப்பதால் இரண்டு இயக்குனர்களும் கூறி இருக்கும் கதையில் ஒன்றில் நடிக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளார்.

பாரா கானின் படம் மற்றும் புதிதாக வந்துள்ள இந்தக் காதல் கதை ஆகிய இரண்டு கதைகள் குறித்தும் ஷாருக்கான் ஆலோசித்து வருகிறார். இது தவிர சில இயக்குனர்களையும் அழைத்து அக்கதைகள் குறித்து பேசி வருகிறார். இரண்டு கதைகளையும் ஆய்வு செய்த பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பார் என்று ஷாருக்கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'கிங்' (King) படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, அதாவது  அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.

"மகாராஷ்டிராவில் இந்தி படங்கள் முதலிடத்தில இருக்கு; ஆனா மராத்தியப் படங்கள்..!"- ரித்தேஷ் தேஷ்முக்

சமீபத்தில் நடைபெற்ற 'Creative Economy Summit' நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மராத்திய திரைத்துறை இன்று எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். "மகாராஷ்டி... மேலும் பார்க்க

Battle of Galwan `டு' மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடை... மேலும் பார்க்க

Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் பாலிவுட்டில் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.“பு​தி​தாக சின... மேலும் பார்க்க

Akshay Kumar: "சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா?" - அக்‌ஷய் குமாரின் பதில் என்ன?

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நட... மேலும் பார்க்க

Aamir Khan: 'ஆமிர் பாய்க்கு...' - 61வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடிய ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 61வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை ஆமீர் கான் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் ஆமிர் கானின்... மேலும் பார்க்க

"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா வைரல் பெண் மோனலிசா

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி ... மேலும் பார்க்க