செய்திகள் :

CSK: `தோனி சொன்ன அட்வைஸ்; நான் அடுத்த ஜடேஜாவா?' - ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வீர், தோனியுடனான தனது முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.

தோனி கொடுத்த அட்வைஸ்

'Sports Star'-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்த் வீர், "மஹி பாய் என்னை முதலில் சந்தித்தப்போது கிரிக்கெட் பற்றி அதிகம் பேசவில்லை. ஐபிஎல் ஒப்பந்தம் செய்த பிறகு எனக்கு கிடைத்த பணத்தை 'தேவையில்லாமல் செலவு செய்யாதே சேமித்து வை' என்று அட்வைஸ் செய்தார்" என்றிருக்கிறார்.

பிரசாந்த் வீர்
பிரசாந்த் வீர்

ஜடேஜா இடத்தை பிடிப்பீர்களா?

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஜடேஜா இடத்தை பிடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " ஜடேஜாவின் இடத்தை நான் பிடிக்க வேண்டும் என நினைத்தால், அது எனக்கு அழுத்தத்தை தான் அதிகம் கொடுக்கும். அவர் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் செய்ததை ஈடுசெய்வது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.

நான் என்னிடம் என்ன இருக்கிறதோ, எது என்னை இந்த இடத்திற்கு அழைத்துவந்ததோ அதை சரியாக செய்யவே முயற்சிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்ய முடியும்!

என்னால் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்ய முடியும். நான் ஓப்பனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத வரை, வேறு எந்த இடத்திலும் என்னால் சிறந்ததைச் செய்ய முடியும். எனக்கு இது முதல் ஐபிஎல் என்பதால் இதற்கு முன்பு நான் இதுபோன்ற பயிற்சி அமர்வுகளில் ஈடுபட்டதில்லை.

பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா
பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா

இங்குள்ள சூழலும் தீவிரமும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் ஆதரவாக இருக்கின்றனர். நான் இங்கே இருப்பது, எனக்கும், என் குடும்பத்திற்கும், என் கிராமத்திற்கும் கிடைத்த பாக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு ... மேலும் பார்க்க

IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30... மேலும் பார்க்க

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர... மேலும் பார்க்க

BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற... மேலும் பார்க்க

Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' - TTR கேட்ட கேள்வி

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள... மேலும் பார்க்க