செய்திகள் :

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல்.

இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, ஜப்பான், நேட்டோ உள்ளிட்ட நாடுகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்ப சொல்லி கேட்டிருந்தார்.

ஆனால், எந்த நாடும் இதற்கு சம்மதிக்கவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

அமெரிக்காவின் சம்பவம்

இந்த நிலையில், அமெரிக்காவே ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருக்கும் ஈரானின் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது...

"ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை ஓரம் ஈரான் நிறுவியிருந்த ஏவுகணைகளை அமெரிக்க படை 5,000 பவுண்ட் எடை கொண்ட பல ஆழ்துளை வெடிகுண்டுகளை வீசி தகர்த்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பலமான எதிர்வினை ஆற்றப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. தற்போதைய அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறதோ?

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்... மேலும் பார்க்க

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

`கோதாவரி கோட்டைக் கிழி...’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அடுத்து வந... மேலும் பார்க்க

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறத... மேலும் பார்க்க

"நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தேன்; எனக்கு எம்எல்ஏ ஆக விருப்பமில்லை!" - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,"விஜய் NDA கூட்டணியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. தெரியாமல் கருத்து... மேலும் பார்க்க

Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி ல... மேலும் பார்க்க