முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?
`உறுதிப்பத்திரம் கொடுத்தால்தான் அனுமதி' - கேதார்நாத் வரும் இந்து அல்லாதவர்களுக்கு புது கட்டுப்பாடு
இந்துக்களின் புனித இடங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் இந்துக்கள் அல்லாத பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி, இந்து அல்லாதவர்கள் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டுமானால், தாங்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிமொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவு கேதார்நாத்திற்கு அடிக்கடி வருகை தரும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் உட்பட அனைத்து இந்து அல்லாத பக்தர்களுக்கும் பொருந்தும். இந்து அல்லாதவர்கள் நான் சனாதன தர்மத்தை நம்புகிறேன் என்று கையெழுத்திட்ட பத்திரம் அளிக்க வேண்டும்.

சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் சனாதன மரபின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால் அவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்கவும், உண்மையான நம்பிக்கை கொண்டவர்களை மட்டும் அனுமதிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் குழுவின் தலைவர் ஹேமந்த் திவேதி,'' கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் தரிசனம் செய்ய விரும்பும் இந்து அல்லாத அனைத்து பார்வையாளர்களும் தாங்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தும் பத்திரத்தை இனி சமர்ப்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் இந்து மதத்தின் மீது தங்களுக்கு உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஆவண ஆதாரங்களை வழங்க வேண்டும்'' என்று அவர் விளக்கினார். இந்த விதி, வழிபாட்டிற்காக வரும் எந்தவொரு இந்து அல்லாத பக்தருக்கும் ஒரே சீராகப் பொருந்தும்.
சாரா அலி கான் அடிக்கடி கேதார்நாத்திற்குச் வருவதைக் சுட்டிக்காட்டிய திவேதி, ``புதிய நிபந்தனையைப் பின்பற்றினால் அந்த நடிகை தொடர்ந்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார். சாரா அலி கான் சனாதன தர்மத்தின் மீது தனது பக்தியை வெளிப்படுத்தி, உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பித்தால், அவரை வழிபாடு செய்ய அனுமதிப்போம்," என்று அவர் கூறினார்.
சாரா அலி கான் தனது அறிமுகத் திரைப்படமான 'கேதார்நாத்' படப்பிடிப்பின் போது அங்கு சென்றதில் இருந்து, அந்தத் தலத்திற்குத் தொடர்ந்து சென்று வருகிறார்.








.jpeg)








