செய்திகள் :

'1 மணி நேரத்தில் 51 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம்;ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்! - அப்செட் சசிகலா?

post image

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. நிர்வாகிகள் மத்தியில் விருப்ப மனு வாங்க பெரிய ஆர்வம் இல்லாததால் சசிகலா கடும் அப்செட் என்கின்றனர் அ.இ.பு.த.ம.மு.க கட்சியினர்.

சசிகலா
சசிகலா

மார்ச் 13 ஆம் தேதி அ.இ.பு.த.ம.மு.க என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சசிகலா, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என கட்சியின் நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் சசிகலாவின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் இன்று முதல் 22.03.2026 வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலாவின் வீட்டு வாசலில் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே விருப்ப மனு வாங்க வந்திருந்தனர். விருப்ப மனு வாங்க வரவேற்பு இல்லாததை அறிந்த அ.இ.பு.த.ம.மு.க நிர்வாகிகள் கொஞ்ச நேரம் காத்திருக்க முடிவெடுத்தனர். 11:30 மணிக்கு நல்ல நேரம் முடிவடைய இருந்ததால் அந்த சமயத்தில் கூடியிருந்தவர்களை உள்ளே அனுப்பி திருத்தணி நரசிம்மன் தலைமையில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கினர்.

விருப்ப மனு விநியோகம்
விருப்ப மனு விநியோகம்

அலைகடலென கூடியிருந்த நிர்வாகிகளுக்கு விருப்ப மனுவை கொடுத்துவிட்டு, பத்தே நிமிடங்களில் நரசிம்மன் கிளம்பி சென்றார். அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சேர்கள் காலியாக கிடந்தன. கூட்டம் எகிறும் என நினைத்து 300 பேருக்கு டீயும் தயார் செய்து வைத்திருந்தனர். நான்கு பேர் சேர்ந்து நின்று டீ குடிக்கும் அளவுக்குக் கூட கூட்டம் இல்லாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

திருத்தணி, ஆவடி, திருப்பெரும்புதூர், பூந்தமல்லி தொகுதிகளுக்கு ஒரு சிலர் விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர். அவர்களும் 'கூட்டமே இல்லாததால் அன்னபோஸ்டாக சீட் கிடைக்கும்' என்று மகிழ்ச்சியாக கிளம்பிச் சென்றனர்.

விருப்ப மனுவில், 'நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் தோராயமாக எவ்வளவு செலவாகும்? உங்களால் சொந்தமாக எவ்வளவு செலவு செய்ய முடியும்? மீதத் தொகைக்கு என்ன செய்வீர்கள்?' என்று ஒரு கேள்வி அழுத்தம் திருத்தமாக கேட்கப்பட்டிருந்தது.

காலி சேர்கள்
காலி சேர்கள்

'அது என்ன தேர்தல் செலவா சார் கேட்குறாங்க...' என பேச்சுக் கொடுத்தால்...'வாய்ல அடிங்க...வாய்ல அடிங்க...அது 'புரட்சி நிதி' என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

விருப்ப மனு விநியோகம் ஆரம்பித்த 1 மணி நேரத்தில் 51 மனுக்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் சசிகலா கடும் அப்செட் என்கின்றனர் அ.இ.பு.த.ம.மு.க கட்சி வட்டாரத்தினர்

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம். திரும... மேலும் பார்க்க

நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

குடும்பத்துடன் உயிரிழப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். அத்துடன், ஏழைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக புத்தாடை வாங்கி வந்து கொடுத்து மகிழ்ந... மேலும் பார்க்க

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்... மேலும் பார்க்க

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

`கோதாவரி கோட்டைக் கிழி...’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அடுத்து வந... மேலும் பார்க்க

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரி... மேலும் பார்க்க

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறத... மேலும் பார்க்க