செய்திகள் :

டெல்லி: துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்; நெஞ்சில் பாய்ந்த தோட்டா; மரணத்தில் முடிந்த வ்யூஸ் மோகம்

post image

டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்டா நிரப்புவது போன்ற வேலையில் ஈடுபட்டார்.

அவரது நண்பர் இந்தக் காட்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பவன் துப்பாக்கியைத் தனது நெஞ்சில் வைத்தார். அதோடு சுடும் டிரிக்கரில் தனது கைவிரல்களை வைத்தார். உடனே வீடியோ எடுத்த நபர் சுட்டுவிடாதே என்று எச்சரித்தார்.

அந்நேரம் பவன் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சிரித்தபடி லேசாக டிரிக்கரை அழுத்தினார். அடுத்த நொடியே துப்பாக்கியிலிருந்த தோட்டா பவன் நெஞ்சில் பாய்ந்தது.

இதில் பவன் அப்படியே சரிந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் இறந்துபோனார்.

துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறது. வீடியோ எடுத்தவர் பெயரில்தான் துப்பாக்கி இருக்கிறது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கி லாக் செய்யப்பட்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு டிரிக்கரை பவன் அழுத்திவிட்டார். ஆனால் துப்பாக்கி லாக் செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால் பவன் மீது தோட்டா பாய்ந்து இறந்துவிட்டார்'' என்று தெரிவித்தனர்.

ரீல்ஸ் எடுக்க நினைத்த வாலிபர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார்.

டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் டைனோசர்கள் ராஜாவாக வலம் வந்தபோது, கடலில் அதைவிடப் பெரிய 'கடல் அசுரன்கள்' வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் மறைந்துபோன அந்த ராட்சத உயிரினத்தைப் பற்றிய ஒரு ரகசி... மேலும் பார்க்க

`ஐபோன் இல்லை, பிளே-ஸ்டேஷன் இல்லை - தந்தை மகனுக்குக் கொடுத்தது அதை விட பெரிய பொக்கிஷம்! Viral video

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு கிளிக்கிலேயே உலகமே நம் கைகளுக்குள் வந்துவிடுகிறது. ஆனால், 90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் புத்தகமும், அதில் வரும் சித்திரங்களும்தான் உலகமாக இரு... மேலும் பார்க்க

குஜராத்: '14 வருட உறவு...' - வளர்ப்பு நாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு ஜாமின்; பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் அவருடன் கடந்த 14 ஆண்டுகளாக இருந்தது. அதன் மீது அதிக அன்பு வைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவருக... மேலும் பார்க்க

"நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின்

'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்... மேலும் பார்க்க

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீரற்ற இதயத் துடிப்பு! - முதியவரின் உயிரை மீட்ட சிம்ஸ் மருத்துவமனை

தொடர்ச்சியான சீரற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த, ஐந்து நாட்களில் 250-க்கும் மேற்பட்ட முறை 'டிஃபிபிரிலேட்டர்' மின் அதிர்ச்சிகள் இந்நோயாளிக்கு தேவைப்பட்டன.சமீபத்தில் அதிக ஆபத்தான இதயநாள பைபாஸ் சிகிச்... மேலும் பார்க்க