முற்றத்து அடுப்பும்... டிம்பர் டிப்போ நினைவுகளும் - நிழலாடும் பால்யம்
"நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின்
'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா. இவர்கள் சோசியல் மீடியாவில் 'Hi Guys.. நான் உங்கள் தேவா என்ற அறிமுகத்துடன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள். படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க என இவர்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

தங்களின் கலகலப்பான பேச்சில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நகைச்சுவையாகவும் வீடியோக்களை வெளியிடும் இவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி, புத்தகங்களை வழங்கி பாராட்டியிருக்கிறார்.
சிறுவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், " நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை மட்டும் கூப்பிட்டேன் தெரியுமா? உங்களை உற்சாகப்படுத்தி பாராட்டத் தான் கூப்பிட்டேன். உங்க வீடியோவை பார்த்தேன். படிங்க படிங்க'ன்னு சொல்றீங்க...நானும் கல்வி சார்ந்த எல்லாக் கூட்டத்திலும் இதை சொல்றேன்.

நீங்க இந்த வயசுலேயே இதை சொல்றீங்க, அதனாலத் தான் உங்களை பாராட்டக் கூப்பிட்டேன். ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க. அதேபோல் உங்க படிப்பிலும் கவனம் செலுத்தணும்" என தேவா, ஜீவாவை பாராட்டி அட்வைஸ் செய்திருக்கிறார்.
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 14, 2026
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.#VibeWithMKSpic.twitter.com/o0nDSkJYZL





















