செய்திகள் :

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

post image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அந்த கார் முழுமையாக எரிந்த நிலையில் கிடந்தது. பனை மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் எரிந்து கிடந்த காருக்குள் நான்கு பேரின் ஊடல்கள் கிடந்தன.

காட்டுப்பகுதியில் கிடந்த அந்த காருக்குள் எரிந்து கிடந்த நான்கு உடல்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகளின் உடல்கள் கருகிய நிலையில் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்தக் குழந்தைகள் பெண்ணின் உடலைக் கட்டிப்பிடித்த நிலையில் இருந்ததால், கார் எரியும்போது குழந்தைகள் தாயைக் கட்டிப் பிடித்து உயிரிழந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் விசாரணையை முடுக்கி விட்டார். அத்துடன், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தன. காரில் இறந்து கிடப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. அவர்கள் கடன் தொல்லை காரானமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து காருடன் எரித்து விட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, "இந்த கார் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை ஆற்றங்கரை பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு வந்தவர்களா என்பதைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கேரளாவில் இருந்து அந்த கார் வந்திருகலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விரைவில் இந்தச் சம்பவத்தின் பின்னணி தெரியவரும்" என்கிறார்கள்.

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ர... மேலும் பார்க்க

`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது' - டி.டி.வி.தினகரன் தாக்கு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக... திமுக அரசைக் கண்டித்து ஆ... மேலும் பார்க்க

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அ... மேலும் பார்க்க

``எனக்கு `அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி ... மேலும் பார்க்க

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச... மேலும் பார்க்க

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு ... மேலும் பார்க்க