செய்திகள் :

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

post image

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது.

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசியவை.

சண்முகம்
சண்முகம்

பெ.சண்முகம் பேசியதாவது, 'மூன்றாம் கட்டமாக பேசி முடித்திருக்கிறோம். கடந்த முறையை விட அதிக சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.

நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் ஒரு முடிவை எடுப்பதில் சிரமமாக இருக்கிறது. எல்லா கட்சிகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை திமுகவுக்கு இருக்கிறது.

எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு இன்று இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் சுமுகமாக முடியுமென நினைக்கிறேன்.

நிறைய கட்சிகள் இருப்பதால் எங்களையும் சீட்டுகளை குறைக்க சொன்னார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவர் கட்சிக்கு ஏற்ப தகுதிக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவது உரிமை. காங்கிரஸ் இதில் வருத்தப்படுவதில் ஒன்றுமில்லை.

பேச்சுவார்த்தையில் எந்த தடையும் இல்லை. இன்று இரவோ அல்லது காலையிலோ கூட அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம்.

சண்முகம்
சண்முகம்

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலக் குழுவை கூட்டி முடிவெடுப்போம். நாங்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கும் கட்சி அல்ல' என்றார்.

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ர... மேலும் பார்க்க

`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது' - டி.டி.வி.தினகரன் தாக்கு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக... திமுக அரசைக் கண்டித்து ஆ... மேலும் பார்க்க

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அ... மேலும் பார்க்க

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது... மேலும் பார்க்க

``எனக்கு `அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி ... மேலும் பார்க்க

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச... மேலும் பார்க்க