செய்திகள் :

Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!

post image

2025-ம் ஆண்டு பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, இப்போது பதுங்கி இருக்கிறது.

கடந்த ஐந்து நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இப்போது தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.1.17 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

ஏன் தங்கம் விலை குறைகிறது?

ஈரான் போர் தொடங்கியதும், தங்கம், வெள்ளி விலை பெரியளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக தொடங்கியது.

ஈரான் போர்
ஈரான் போர்

ஈரான் போர் காரணமாக, விலைவாசி அதிகரிக்கும்... அதனால், தொடர்ந்து பொருள்களை வாங்கவும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கவும் அமெரிக்க டாலரைப் பாதுகாப்பான முதலீடாக உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் பார்த்தனர்... முதலீடு செய்தனர்.

இதனால், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறவில்லை. அதனால், இந்தியாவிலும் தங்கம் விலை ஏறவில்லை.

தங்கம் விலை 'இறங்குமுகமா'?

இப்போது தங்கம் விலை 'இறங்குமுகத்தில்' உள்ளதா என்று பார்த்தால், அப்படி இல்லை. தற்போது தங்கம் விலை நிலையாக இருந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,100 டாலர்களுக்குக் கீழ் சென்றால் தான், அது இறங்குமுகத்தில் இருக்கிறது என்று பொருள் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம்
தங்கம்

இப்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,000 டாலருக்கு மேல் தான் வர்த்தகம் ஆகி வருகிறது.

சரி... இப்போது தங்கம் விலை நிலையாக தானே இருக்கிறது. இந்த நேரத்தில் அதில் முதலீடு செய்யலாமா? இப்போது முதலீடு செய்து வைத்தால், போருக்குப் பின் அதன் விலை ஏறுமா ஆகிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"இந்தப் போர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பல கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. இந்தப் போர் நிறைவு பெற்றதும், அந்தக் கட்டமைப்புகள் மீண்டும் சீரமைக்கப்படும்... மறுகட்டமைக்கப்படும்.

இதற்கு வெள்ளி, அலுமினியம், செம்பு (Copper) போன்ற உலோகங்கள் தேவைப்படும்.

ஆனால், இப்படி தங்கத்திற்குத் தேவை இருக்குமா என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. இதனால், போர் முடிந்ததும் வெள்ளி, அலுமினியம், செம்பு ஆகியவற்றின் விலை உயரலாம்.

ஆனால், தங்கம் விலை நிலையாகவே தொடரும்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

ஆபரேஷன் 'கியூபா'

இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அடுத்த டார்க்கெட்டாக கியூபாவை அறிவித்துள்ளார். ஆனால், கியூபா மீதான தாக்குதல் உலக வர்த்தகத்தைப் பாதிக்குமா என்று கேட்டால், அது கிடையாது.

அதனால், போருக்குப் பின் தங்கம் மற்றும் வெள்ளியில் சின்ன ஏற்றம் இருக்கலாம். ஆனால், அது குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும்.

ஏற்கெனவே தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், அது போதும். ஆனால், தற்போதைய சூழலில், சிறிய அளவிலான முதலீடு மட்டுமே போதுமானது. பெரிய எதிர்பார்ப்பில் முதலீடுகள் வேண்டாம்."

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

Gold Rate: 'தொடர்' சரிவில் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60வும், பவுனுக்கு ரூ.480வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,650 ஆகும்.தங்கம்இன்று ஒரு... மேலும் பார்க்க

குறைந்துகொண்டே போகும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 ஆகவும், பவுனுக்கு ரூ.400 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.கடந்த நான்கு நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம்... மேலும் பார்க்க

மெல்ல மெல்ல 'இறங்கும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 ஆகவும், பவுனுக்கு ரூ.1,120 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்... மேலும் பார்க்க

இரண்டு நாள்களாக 'குறையும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை ஏறிய தங்கம் விலை நேற்றும், இன்றும் இறங்கியுள்ளது... மேலும் பார்க்க

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் 'இறக்கம்' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஆகவும், பவுனுக்கு ரூ.1,200 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,970 ஆகும்.தங்கம... மேலும் பார்க்க

'சின்ன' ஏறுமுகத்தில் தங்கம்? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு கொஞ்சம் சரிவில் உள்ளது. அதன் விளைவாக, கடந்த இரு நாள்களாக சர்... மேலும் பார்க்க