`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!
Happy Raj: "பஞ்சாயத்துக்கு தீர்ப்பு வழங்கபோய் நம்ம படத்தை செஞ்சிட போறாங்க'ன்னு.!"- விஜய் சேதுபதி
பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ், கெளரி பிரியா நடித்திருக்கும் படம் 'ஹேப்பி ராஜ்'.
பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (மார்ச்.17) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, "முதலில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்குமரன் சாருக்கும் அவரது அணிக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

ஆனால் நமக்கு இதெல்லாம் செட்டாகாது. ஏதாவது பஞ்சாயத்து என உட்கார்ந்து, அதற்கு தீர்ப்பு வழங்கப்போய், நம்ம படத்தை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான்.
பொறுப்பு என்று ஒன்று கொடுத்தால், அந்த பொறுப்பை பொறுப்பாக செய்யவேண்டும். அதை செய்வதால் ஏதாவது பிரச்னை வந்தால் எப்படி. மற்றபடி வெற்றி பெற்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். எந்தத் தயாரிப்பாளர் புதிதாக வந்தாலும், அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
சினிமா மிகவும் அற்புதமான தொழில், யார் என்ன சொன்னாலும் பயப்படவே பயப்படாதீர்கள். இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
எப்படி நடிகரோ, இயக்குநரோ சினிமாவை படிக்கிறார்களோ, அதேபோல் தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும், ஸ்க்ரிப்ட்டையும் படித்தால் நன்றாக இருக்கும். படியுங்கள், நிறைய படம் பண்ணுங்கள்.
இந்தப் படத்தில் மரியா இளஞ்செழியனுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஜி வியே நன்றாக பாட்டு போடுவார். ஆனால், ஜஸ்டின் உடன் இரண்டாவது முறை இணைந்து பணியாற்றுகிறார்.

ஜஸ்டின் எனக்கு மிகவும் நெருக்கமான நபர். 'பண்ணையாரும் பத்மினி'யும் படத்திலிருந்து பழக்கம். அவன் மீது அன்பும் மரியாதையும் எனக்கு இருக்கிறது.
சமீபத்தில் அவனுடைய 'சர்வம் மாயா', 'சிறை' போன்ற படங்கள் எல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. அவன் எந்த உயரத்தை அடைய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை நோக்கி பயணிக்கிறான்.
படத்தின் ட்ரெய்லர் மிக ஜாலியாக, சுவாரஸ்யமாக இருந்தது. ஜி வி எப்போதுமே ஸ்கூல் பையனாக நடிக்கலாம் போல. 90ஸ், ஜென் ஸீ, இன்னும் 50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் போல. ரொம்ப நன்றாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துகள்" என்று பேசியிருக்கிறார்.


















