செய்திகள் :

" 'வீரம்' படப்பிடிப்பின்போது எனக்கு இட்லி செய்து கொடுத்தார்"- அஜித் குறித்து பகிர்ந்த தமன்னா

post image

தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசிவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

மேடையில் பேசிய தமன்னா," தற்போது 'புருஷன்' என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, அதை பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

தமன்னா
தமன்னா

நான் முதன் முதலில் நடித்த 'கல்லூரி' திரைப்படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அந்தக் கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருந்தது.

கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நீங்கள் என்ஜாய் செய்ய வேண்டும். இந்தக் காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. 21 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி" என்றிருக்கிறார்.

தொடர்ந்து விஜய் பற்றிப் பேசிய தமன்னா, " மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்" என்று கூறிருக்கிறார்.

வீரம் படத்தில் அஜித், தமன்னா
வீரம் படத்தில் அஜித், தமன்னா

அஜித் பற்றி சொல்லும்போது, " 'வீரம்' திரைப்பட படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தன்" என புகழ்ந்து பேசியிருக்கிறார்.

"தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.!" - 'சிறை' பற்றி வெற்றிமாறன்

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம... மேலும் பார்க்க

சிறை: "காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!"- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில்... மேலும் பார்க்க

'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்

கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது 'யூத்' படத்தை இயக்க... மேலும் பார்க்க

கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' - சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் ... மேலும் பார்க்க

Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்!

நீலகிரி மாவட்ட கிராமம் ஒன்றில் கொரியா குறித்த பெருங்கனவுகளுடன் வளர்கிறார் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன... மேலும் பார்க்க