செய்திகள் :

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

post image

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல்ல மாறி உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் கேஸ் சிலிண்டர் பிரச்னையை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாள்களுக்கு தமிழ்நாட்டில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விறகு அடுப்பு
விறகு அடுப்பு

மேலும், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாவது, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்பட உள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான இந்தச் சலுகை தொடரும்.

டீக்கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்தச் சூழலில் விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னனுமதி தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சியா? - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் ந... மேலும் பார்க்க

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.இந்த நிலையில், ஜப... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது!" - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச... மேலும் பார்க்க

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்ட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போ... மேலும் பார்க்க

திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ... மேலும் பார்க்க