செய்திகள் :

``கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" - அண்ணாமலை அதிரடி

post image

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதம் தடுக்கபட்டிருக்கலாம்.

அண்ணாமலை

இது காவல்துறை மற்றும் முதல்வரின் தோல்வி. பெட்ரோல், கேஸ் விவகாரத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்புவதால் பொது மக்கள் கேன்களுடன் சென்று பெட்ரோல் வாங்கும் நிலை இருக்கிறது. திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் தான் பீதியை கிளப்புகின்றனர்.

விளாத்திகுளத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்ல வேண்டும். உள்துறை செயலாளர் கொடுக்கும் தகவல்கள் பொய்யாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது  என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக சிபிஐ விசாரணை கேட்டது. அதற்கு நாங்களும் குரல் கொடுத்தோம். ஜனநாயகன் படம் பற்றி விஜய்யே பேசவில்லை, முதலில் அவர் பேசட்டும். பிறகு நான் பேசுகிறேன்.

கரூர் தவெக கூட்டத்தில் விஜய், ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்று சொன்ன போதுதான் செருப்பு வந்து விழுந்தது. மருத்துவமனைக்கு முதல் ஆளாக சென்றவர் செந்தில் பாலாஜி. அவரை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எப்போதும் டிவிஸ்ட் இருக்கும்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த முறை என்ன டிவிஸ்ட் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை, பாஜக  விமர்சித்தது உண்மை. எடப்பாடி  பழனிசாமியும் என் மீது விமர்சனம் வைத்தார். அரசியலில் பின்னாடி திரும்பி பார்த்தால் அரசியல் செய்ய முடியாது” என்றார்.

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" - எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் ... மேலும் பார்க்க

இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?

புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங... மேலும் பார்க்க

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந... மேலும் பார்க்க

'ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?'- அன்புமணி கேள்வி

'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்கள் தேவா, ஜீவாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வ... மேலும் பார்க்க

சுயேட்சையிடம் டெபாசிட் இழந்த திமுக; நோட்டாவுக்கு பின்னால் பாஜக; அதிமுக அவுட்! | RK நகர் ஆடுபுலி 09

அரசியல் ஆடுபுலி 09மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த வி.கே.சசிகலா 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்... மேலும் பார்க்க

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல... மேலும் பார்க்க